நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி, தயாரிக்கும் பான் இந்திய படமான ‘சைந்தவ்’ படத்தில் நடிகர் ஆர்யாவும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் ஆர்யாவுடன் வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா, சாரா, ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
எழுத்து – இயக்கம்: சைலேஷ் கொலானு, தயாரிப்பு – வெங்கட் பொயனபள்ளி, பேனர் – நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட், இசை – சந்தோஷ் நாராயணன், இணை தயாரிப்பு – கிஷோர் தல்லூர், ஒளிப்பதிவு – எஸ். மணிகண்டன், படத் தொகுப்பு – கேரி பி.ஹெச், தயாரிப்பு டிசைனர் – அவினாஷ் கொல்லா, பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் குமார்.
விக்டரி வெங்கடேஷின் 75-வது படமான இந்த சைந்தவ் திரைப்படத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் நோக்கில், இந்தியாவின் தலைசிறந்த நட்சத்திரங்களும், தொழில் நுட்பக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.
இந்தப் படத்தின் கதை எட்டு முக்கிய நடிகர்களை சுற்றி நடக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏழு கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று மற்றொரு மிக முக்கிய கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் புகழ்பெற்ற நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யாவும், இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மனாஸ்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மெல்லிய தோற்றம், ஸ்டைலிஷ் லுக்கில் மிஷின் கன்னை கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஆர்யா, அனைவரையும் கவர்ந்திழுக்கிறார்.
அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி மொழியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வரும் டிசம்பர் 22-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.









