full screen background image

சின்ன கேப்டன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் ‘சகாப்தம்’ ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகிறது..!

சின்ன கேப்டன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் ‘சகாப்தம்’ ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகிறது..!

கேப்டன் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘சகாப்தம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகும் என்று இன்றைக்கு அறிவித்திருக்கிறார்கள்.

கேப்டன் விஜயகாந்தின் ‘வல்லரசு’, ‘நரசிம்மா’, ‘தென்னவன்’, ‘சுதேசி’, ‘அரசாங்கம்’, ‘விருதகிரி’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது., 

இதில் நாயகிகளாக ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற நேகாவும், ‘மிஸ் பெங்களூர்’ பட்டம் வென்ற சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள்.

இவர்களோடு சிங்கம் புலி, ஜெகன், ‘பவர் ஸ்டார்’ டாக்டர் சீனிவாசன், தேவயானி, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன், ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ், ‘தலைவாசல்’ விஜய் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பூபதி ஒளிப்பதிவு செய்ய ஜே.கே. கலை இயக்கம் செய்திருக்கிறார். சண்டை பயிற்சி – மாஸ்டர் கேட்சா, நடனம் – ஷோபி, அபி, நோபல். கவிஞர்கள் நா.முத்துக்குமார், விவேகா, பா.விஜய் ஆகியோரின் பாடல்களுக்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். நவீன் கிருஷ்ணாவின் கதை-திரைக்கதைக்கு வேலுமணி வசனம் எழுதியிருக்கிறார். அறிமுக இயக்குநர் சுரேந்தர் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் பெற்றுள்ளது. இந்த மாதம் நிறைய பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாகி முடிந்துவிடும் என்பதால் அடுத்த மாதத் துவக்கத்தில் ஏப்ரல்-2-ம் தேதியன்று ‘சகாப்தம்’ படத்தைத் திரைக்கு கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள்.

வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

Our Score