இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த ‘சபரி’ திரைப்படம் மே 3-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மஹா மூவீஸுக்காக தயாரிப்பாளர் மகேந்திர நாத் கொண்ட்லா இந்த ‘சபரி’ படத்தைத் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் அனில் கட்ஸ் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அவரே கையாண்டுள்ளார். மகரிஷி கொண்ட்லா படத்தை வழங்குகிறார்.
இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பம்பாய்), ‘விவா’ ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
கூடுதல் திரைக்கதை – சன்னி நாகபாபு, பாடல்கள் – ரஹ்மான், மிட்டபள்ளி சுரேந்தர், ஒப்பனை – சித்தூர் ஸ்ரீனு, உடைகள் – ஐயப்பா, ஆடை வடிவமைப்பு – மானசா, புகைப்படங்கள் – ஈஷ்வர், டிஜிட்டல் PR – விஷ்ணு தேஜா புட்டா, பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, தயாரிப்பு நிர்வாகி – லக்ஷ்மிபதி கண்டிபுடி, இணை இயக்குநர் – வம்சி, சண்டை பயிற்சி இயக்கம் – நந்து, நூர், VFX – ராஜேஷ் பாலா, நடன இயக்கம் – சுசித்ரா சந்திரபோஸ், ராஜ் கிருஷ்ணா, கலை இயக்குநர் – ஆஷிஷ் தேஜா பூலாலா, படத்தொகுப்பு – தர்மேந்திர ககரலா, புகைப்படங்கள் – ராகுல் ஸ்ரீவத்சவா, நிர்வாக தயாரிப்பாளர் – சீதாராமராஜு மல்லேலா, இசை – கோபி சுந்தர், வழங்குபவர் – மகரிஷி கொண்ட்லா, தயாரிப்பு – மகேந்திர நாத் கொண்ட்லா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அனில் கட்ஸ்.

எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக் குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் நாயகியான வரலட்சுமி சரத்குமார் படத்தில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளார்.
இந்தப் பல மொழித் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.









