டிரைவிங் தெரியாமலேயே நடித்து முடித்த நடிகையின் சாமர்த்தியம்..!

டிரைவிங் தெரியாமலேயே நடித்து முடித்த நடிகையின் சாமர்த்தியம்..!

‘சூது கவ்வும்’ திரைப்படத்தில் கற்பனை கதாப்பாத்திரமாக தோன்றி, தமிழக இளைஞர்களின் உள்ளங்களை கிறங்கடித்தவர் சஞ்சிதா ஷெட்டி.

இவர் தற்போது அறிமுக இயக்குனர் 'சாய்' இயக்கும் 'ரம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான  'பீட்சா - 2' படத்திற்கு பிறகு, மூன்று வருடங்கள் கழித்து இவர் நடிக்கும் தமிழ் படம் இதுதான்.

அனிரூத் இசையமைப்பில் All In Pictures விஜய் தயாரிப்பில் 'ரம்' ஒரு திரில்லர் மூவி. இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க இரவு நேரத்தில்தான் நடைபெற்றதாம்.

இந்தப் படத்தில் நடித்த்து பற்றி நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசுகையில், "இந்தப் படத்தில் நான் கார் ஓட்டிச் செல்லும் காட்சியிருப்பதை இயக்குநர் முன்கூட்டியே சொல்லியிருந்தார்.  அப்போதே என் மனதிற்குள் ஒரு பயம் கலந்த பதற்றம் ஏற்பட்டது. ஏனெனில் எனக்கு டிரைவிங் தெரியவே தெரியாது. ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று கொஞ்சம் தைரியத்துடன் இயக்குநரிடம் எதையும் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

ஆனால் அந்தக் காட்சியின்போது எனது சக நடிகர்களாகிய ரிஷிகேஷ், விவேக் மற்றும் அம்ஜத் ஆகியோருடன் காரில் ஏறியவுடன் பயத்தின் உச்சத்துக்கே  சென்று விட்டேன்… எப்படியோ அந்தக் காட்சியை அப்படி, இப்படி ஓட்டிவிட்டு தப்பித்தோம்டா என்கிற எண்ணத்துடன் காரைவிட்டு இறங்கி ஓடினேன்.

அப்போது இயக்குநர் என்னிடம் கேட்ட கேள்வி, என் பதற்றத்தையெல்லாம் சிரிப்பாக மாற்றிவிட்டது. "ஏம்மா.. கார் ஒட்ட தெரியாதுன்னு முன்னாடியே சொல்லியிருக்கலாமே..?” என்றார் சீரியஸாக..! அப்போ நான் எப்படி கார் ஓட்டியிருப்பேன்னு நினைச்சுப் பாருங்க..” என்கிறார் சிரிப்பு மாறாமல்..!