‘ரம்’ திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான பங்களா!

‘ரம்’ திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான பங்களா!

புதுமுக இயக்குனர் சாய் பரத் இயக்கி, ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரித்து வழங்கவிருக்கும் திரைப்படம் ‘ரம்’.

இந்தப் படம் துவங்கிய கட்டத்தில் இருந்தே மக்களிடம் ஏகப்பட்ட வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல், அனைத்து ஊடகங்களிலும், செய்தித் தாள்களிலும் தலைப்புச் செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

சஞ்சீதா ஷெட்டியின் கார் சாகசத்தில் ஆரம்பித்து, அனிரூத்தின் ஹோலா அமிகோ பாடல், கிராமிய விருது பெற்ற டிஜே டிப்லோவின் பாராட்டு என தொடர்ந்து மக்களின் எதிர்பார்ப்பை ‘ரம்’ திரைப்படம் அதிகரித்து கொண்டே போகிறது.

தற்போது ‘ரம்’ படத்திற்கு மேலும் சுவாரசியத்தை அதிகரிக்கும் வண்ணமாக அமைந்துள்ளது ரம் திரைப்படக் குழுவினர் படப்பிடிப்புக்காக அம்பத்தூரில் அமைத்துள்ள பிரம்மாண்ட பங்களா.  

இந்த பங்களாவை  நேரில் கண்ட சினிமா பிரபலங்கள் சிலர், இதன் அமைப்பையும், வடிவத்தையும் பார்த்து பிரமித்த்து மட்டுமின்றி படக் குழுவினரையும் வெகுவாக பாராட்டினார்கள்.

“எங்களின்  கதைப்படி ஒரு பிரம்மாண்ட பங்களா  எங்களுக்கு தேவைப்பட்டது. ஆனால் சென்னை  முழுவதும் நாங்கள் அலசி தேடி பார்த்த போதும், எங்களின் கதைக்கு ஏற்றதுபோன்று வீடு அமையவில்லை.  

வேறு வழியில்லாமல் படத்தின் காட்சிகளை  மிக தத்ரூபமாக உருவாக்க வேண்டும் என்று நினைத்து நாங்களே அம்பத்தூர் பகுதியில் இந்த திகிலூட்டக் கூடிய பங்களாவை கட்டினோம்.

இந்தப் படத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’  புகழ்  ஹரிஷிகேஷ், விவேக், சஞ்சிதா ஷெட்டி, ‘அஞ்சாதே’ நரேன், மியா ஜார்ஜ்,  அம்ஜத் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த ‘ரம்’ திரைப்படத்திற்கு அனிரூத்தின் இசையும் பக்கபலமாக அமைந்துள்ளது.

நரேன் மற்றும் மியா இருவரும் தங்களின் பிசியான நேரத்திலும், ரம் திரைப்படத்திற்காக இரவும் பகலுமாய் உழைத்து, தங்களுக்குரிய கதாப்பாத்திரங்களை கனகச்சிதமாக நடித்து முடித்துவிட்டனர்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி கொண்டிருக்கும் இந்த ‘ரம்’ படமானது, மற்ற திகில் படங்களில் இருந்து முற்றிலும் வித்யாசமாக, மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு இருக்கும்..” என்கிறார் ‘ரம்’ படத்தின் இயக்குநரும், VFX துறையில் கை தேர்ந்தவருமான சாய் பரத்.

Our Score