EVERGREEN MOVIE INTERNATIONAL நிறுவனத்தின் சார்பில் V.A.DURAI தயாரிக்கும் புதிய படம் ‘காகித கப்பல்’
இதில் கதையின் நாயகனாக சிவபாலன் என்கின்ற அப்புக் குட்டி நடிக்கிறார். தில்லிஜா என்கிற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், பரோட்டா முருகேசன், எலிராஜன். ரமேஷ் மாணிக்கம், சுஜாதா, சூப் பாபு ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.
இசை : பிரசன்னா, ஒளிப்பதிவு : வெங்கட், படத் தொகுப்பு : யாசின், கலை இயக்குனர் : சாய் குமார், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு நிறுவனம்: எவர்க்ரீன் மூவி இன்டர்நேஷனல், தயாரிப்பாளர் : V.A.துரை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எஸ்.சிவராமன்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் எஸ்.சிவராமன், “9 வயதிலிருந்து குப்பை சேகரித்து உழைப்பால் உயர்ந்தவன் ஹீரோ. நேர்மையான உழைப்பு மற்றும் சேமிப்பையும் குறிக்கோளாக வைத்து வாழ்பவன்.
படித்த பெண் ஒருத்தி நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். நிர்ப்பந்தத்தின் காரணத்தினால் இருவரும் மணம் முடிக்கின்றனர்.
படிக்காதவன், படித்தவளாக இருந்தும் இருவரும் தரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இந்தச் சூழலில் கதாநாயகியின் ஒரே ஒரு ஆசையால் அவர்களது வாழ்க்கை ஒரு நாளில் ‘காகித கப்பல்’ ஆக மாறுகிறது. அது என்ன என்பதும், அதன் பின் விளைவுகளும்தான் படத்தின் கதை..” என்றார்.









