ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ருத்ரன்’ படம் துவங்கியது..!

ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ருத்ரன்’ படம் துவங்கியது..!

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ‘ருத்ரன்’ என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நாசர், பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்ட பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

K.P.திருமாறனின் கதை, திரைக்கதையில் உருவாகும் இந்த ‘ருத்ரன்’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தயாரிப்பு – Five Star கிரியேஷன்ஸ், இசை – G.V.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு – R.D. ராஜசேகர், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM), கதை, திரைக்கதை – K.P.திருமாறன், இயக்கம் – பைவ் ஸ்டார் S.கதிரேசன்.

தயாரிப்பாளர் S.கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் ‘ருத்ரன்’ படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

Our Score