பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் வழங்கும், நடிகர்கள் சித்தார்த், ராஷி கண்ணா நடிக்கும் ’ரெளடி & கோ’ திரைப்படத்தின் டீசர் போஸ்டர் கான்செப்ட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது!
தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ’ரெளடி & கோ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. வழக்கமான முயற்சியாக அல்லாமல், இந்தப் படத்தின் டீசர் போஸ்டர் கான்செப்ட்டை புதிய முறையில் படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ‘ரெளடிகளை தேர்ந்தெடு, அவர்களை படத்தின் முதல் பார்வையில் வெளியிடு’ என்பதுதான் அந்த கான்செப்ட். இதன் மூலம் படத்தின் முன்னணி நடிகர்களையும் இந்த போஸ்டர் வெளிப்படுத்துவது ரசிகர்கள் மத்தியில் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரிக்கும் இந்த வித்தியாசமான காமெடி திரைப்படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
’கப்பல்’ படம் மூலம் பாராட்டப்பட்ட இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் வித்தியாசமான முயற்சியாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்திருக்க, ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி, சார்ல்ஸ் வினோத் மற்றும் ’தனி ஒருவன்’ வில்லன் வம்சி கிருஷ்ணா ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கும் ‘ரெளடி & கோ’ திரைப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறைவு செய்து வருகிறது. படத்தின் முதல் பார்வையை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ள இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் மிகப்பெரிய பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என பேஷன் ஸ்டுடியோஸ் உறுதியளிக்கிறது.
தொழில் நுட்பக் குழு
ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்,
படத்தொகுப்பு: பிரதீப் இ. ராகவ்,
புரொடக்ஷன் டிசைன்: ஆறுச்சாமி,
இசை: ரேவா.









