கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், நிவின் பாலி – நட்டி நட்ராஜ் முன்னணி வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு ‘ரிச்சி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த ‘ரிச்சி’ படத்தில் பிரகாஷ்ராஜ், ‘யு டர்ன்’ படப் புகழ் ஷ்ரத்தா ஸ்ரீனிவாஸ், ராஜ் பரத் மற்றும் ‘சுட்ட கதை’ புகழ் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“இந்த ‘ரிச்சி’ படத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் மையப்படுத்திதான் இந்த ‘ரிச்சி’ படத்தின் கதை நகரும்.
பலவித யோசனைகளுக்கு பிறகே, இந்தப் படத்திற்கு ‘ரிச்சி’ என்று தலைப்பு வைத்துள்ளோம். ‘ரிச்சி’ என்பது நிவின் பாலி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர். தமிழில் முதல்முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கும் நிவின் பாலி, ஏறக்குறைய 75 சதவீத படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்து இருக்கிறார்.
வருகின்ற கோடை விடுமுறை நாட்களில் நாங்கள் ‘ரிச்சி’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். படத்தின் முதல் காட்சி போஸ்டரையும், டைட்டில் டிசைனையும் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்…” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன்.