தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா தயாரிப்பாளராகவும் உள்ளார்.
தமிழில் ‘அமரகாவியம்’, ‘ஜீவா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ ஆகிய படங்களையும், மலையாளத்தில் சில படங்களையும் ஆர்யா தயாரித்துள்ளார்.
தற்போது ஆறு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் தயாரிப்பாளராக ஆர்யா களமிறங்கி உள்ளார்.
இப்போது ஆர்யா தமிழிலும், மலையாளத்திலும் ஒரே நேரத்தில் வெளியாகும்வகையில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார்.
இந்தப் படத்தில் அரவிந்த்சாமியும், பிரபல மலையாள நடிகரான குஞ்சக்கோ போபனும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு தமிழில் ‘ரெண்டகம்’ என்றும் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.
இப்படங்களின் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளார்கள்.