தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும்.
அந்த தைரியம்தான் இதுநாள்வரை சிவகார்த்திகேயன் நடித்தராத அளவுக்கு தற்போது அவர் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்க 24 AM தயாரிப்பு நிறுவனத்தை தூண்டியுள்ளது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் ராசியான ஜோடியான கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சதீஷ், யோகிபாபு, சரண்யா, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர்.
வரும் அக்டோபர் 7-ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகவிருக்கும் இந்த படம் இப்போது ஜப்பானிலும் வெளியாகவுள்ளது. ஜப்பான் நாட்டில் ரெமோ படத்தை வெளியிடும் உரிமையை ‘மெட்ராஸ் மூவிஸ்’ என்னும் நிறுவனம் பெற்றுள்ளது.
ரஜினி படங்களை தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களின் படமும் ஜப்பானில் உள்ள யொகோயமா (Yokoyama) மற்றும் டோக்கியோ (Tokyo) ஆகிய இரண்டே ஏரியாக்களில் மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் முதன்முறையாக, ரஜினிக்கு அடுத்து நகோயா (Nagoya) எனும் மூன்றாவது ஏரியாவிலும் ‘ரெமோ’வை திரையிட உள்ளார்களாம்.
சிவகார்த்திகேயனுக்கு மச்சம்தான்..!














