full screen background image

“சிவகார்த்திகேயனின் பெண் வேட டிரெஸ்ஸிங்தான் சவாலாயிருச்சு” – காஸ்ட்யூம் டிஸைனரின் பேட்டி

“சிவகார்த்திகேயனின் பெண் வேட டிரெஸ்ஸிங்தான் சவாலாயிருச்சு” – காஸ்ட்யூம் டிஸைனரின் பேட்டி

‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் அணிந்திருக்கும் ‘மார்லின் மன்றோ’ ஸ்கர்ட்டுதான் தற்போதைய இளசுகளின் டிரெஸ் கோடிங்காக இருக்கிறது.  

பார்த்தவுடன் கண்களை கவரும் அந்த ஆடையை வடிவமைத்தவர், ‘ரெமோ’ படத்தின் ஆடை வடிவமைப்பாளரான அனு பார்த்தசாரதி.

remo-poster-3 

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றும் வலிமை ஆடை வடிவமைப்பாளருக்கும் இருக்கிறது. பல படங்களில் ஹீரோக்களையும், ஹீரோயின்களையும் மிக அழகாக காட்டுவது அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள்தான் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ‘ரெமோ’ படத்தில் பணியாற்றியது பற்றி பேசிய அனு பார்த்தசாரதி, “முதலில் இயக்குநரின் சிந்தனையை புரிந்து கொண்டும். கதாபாத்திரத்தை நினைவில் வைத்து கொண்டும் ஆடைகள் வடிவமைப்பதே ஒரு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கு அழகு. எங்களின் ‘ரெமோ’ திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருவதை பார்க்கும் பொழுது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. 

remo_nurse

‘ரெமோ’ படத்தில்  சிவகார்த்திகேயனை இரண்டு கதாபாத்திரங்களில் பார்க்கலாம். ஒன்று,  இந்த காலத்திற்கேற்ற மாடர்ன் இளைஞன் கதாபாத்திரம். மற்றொன்று அழகான செவிலியர் கதாபாத்திரம். இதில் செவிலியர் வேடத்திற்கு ஆடை வடிவமைப்பதுதான் எனக்கு மிகுந்த சவாலாக இருந்தது.

dd89e3d4-1dbe-404e-9684-b110028666e4

பொதுவாகவே ஒரு ஆணை, பெண்ணாக தோற்றுவிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால், எங்கள் ‘ரெமோ’ படத்தின் ஒட்டுமொத்த படக் குழுவினரின் உதவியால் இந்த பணியை என்னால் வெற்றிகரமாக செய்து முடிக்க முடிந்தது. இந்த கதாபாத்திரமானது யதார்த்தமாக அமைய,  செவிலியர் ஆடை மீது இருக்கும் பட்டன், பெண்கள் விரும்பி அணியும் அலங்கார நகை போன்ற சிறு சிறு விஷயங்களில் அதீத கவனம் செலுத்தி இருக்கிறேன்.

தொழில் நுட்ப கலைஞர்களுக்கு தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுக்கும் ஒரு நடிகர் சிவகார்த்திகேயன். கடினமான தருணங்களிலும் புன்னகைக்கும் மனோபாவம் படைத்தவர் அவர்.

அதே போல் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி. எந்த கலாச்சார  ஆடையாக இருந்தாலும் சரி, அது கீர்த்தி சுரேஷிற்கு கன கச்சிதமாக பொருந்தும். அதுதான் அவருடைய முக்கியமான சிறப்பம்சம். ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களின் திறமையையும் ‘ரெமோ’ படத்தின் அனைத்து   காட்சிகளிலும் பிரதிபலிக்குமாறு செய்திருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்.

4cb56e59-198a-4985-be45-2b076269799c

எனக்கு பக்கபலமாய் இருந்த தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா சார், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சார் மற்றும் அற்புதமான கலை இயக்குநர் முத்துராஜ் சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

வரும் தசரா விடுமுறை நாளில் ரசிகர்களின் ரிலீஸாகவிருக்கும் ‘ரெமோ’ திரைப்படம் ரசிகர்களின் மகிழ்ச்சியை நிச்சயமாக இரட்டிப்பாக்கும்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

Our Score