விஜய் சேதுபதி, லஷ்மி மேனன் ஜோடியில் உருவாகும் ‘றெக்க’ திரைப்படம்

விஜய் சேதுபதி, லஷ்மி மேனன் ஜோடியில் உருவாகும் ‘றெக்க’ திரைப்படம்

விஜய் சேதுபதி நடிக்கும் ‘றெக்க’ படத்தின் போட்டோ ஷூட் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை தயாரித்த common man presents B.கணேஷ், மிக பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கும் படம் ‘றெக்க’.

இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை லக்ஷ்மி மேனன் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ‘வா டீல்’  படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்குகிறார்.  

இப்படத்துக்கான போடோ ஷூட் சமீபத்தில் ஏவி.எம். ஸ்டுடியோவில் மிக பிரம்மாண்டமான செலவில் பிரபல புகைப்பட கலைஞரான ஜி.வெங்கட்ராமனால் எடுக்கப்பட்டது..

முதல் முறையாக, ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கபோவது நிச்சயம்.

முழுக்க, முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு முழு நீள கமர்சியல் திரைப்படமாக வரப் போகும் இந்த ‘றெக்க’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது.