அசோக் செல்வன்- சம்யுக்தா ஹர்னாத் நடிக்கும் ‘ரெட் ரம்’ திரைப்படம்

அசோக் செல்வன்- சம்யுக்தா ஹர்னாத் நடிக்கும் ‘ரெட் ரம்’ திரைப்படம்

டைம் லைன் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.செளந்தர், சி.பி.கணேஷ் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரெட் ரம்’.

‘பில்லா-2’, ‘பீட்சா’, ‘தெகிடி’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘சவாலே சமாளி’, ‘144’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’, ‘முப்பரிமாணம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அசோக் செல்வன் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருடைய நடிப்பில் ஏற்கெனவே ‘ஆக்ஸிஜன்’, ‘நெஞ்சமெல்லாம் காதல்’ ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

நாயகியாக சம்யுக்தா ஹர்னாத் நடிக்கவிருக்கிறார். கன்னட நடிகையான இவர் ஏற்கெனவே தமிழில் ‘உன் சமையலறையில்’ படத்தில் நடித்திருக்கிறார். இது இவரது இரண்டாவது தமிழ்ப் படமாகும்.

தயாரிப்பு – ஏ.செளந்தர், சி.பி.கணேஷ், எழுத்து, இயக்கம் – விக்ரம் ஸ்ரீதரன், ஒளிப்பதிவு – குகன் எஸ்.பழனி, இசை – விஷால் சந்திரசேகர், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, கலை இயக்கம் – ஏ.கோபி ஆனந்த், ஸ்டைலிஸ்ட் – மீனாட்சி ஸ்ரீதரன், ஒலி வடிவமைப்பு – விஷ்ணு கோவிந்த், ஸ்ரீசங்கர், கிராபிக்ஸ் – ராம்குமார், சண்டை இயக்கம் – மிராக்கிள் மைக்கேல், இணை தயாரிப்பு – கே.சதீஷ்குமார், மக்கள் தொடர்பு – நிகில்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் பூஜை நிகழ்வுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் அசோக் செல்வன், நாயகி சம்யுக்தா ஹர்னாத், இயக்குநர் விக்ரம், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 

Our Score