இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் RED LABEL(ரெட் லேபிள்).
REVGEN ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் லெனின் இந்தப் படத்தைத் தயாரித்து கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முக்கிய வேடத்தில் அஸ்மின் யாசர் நடிக்கிறார்.
பிரபல எடிட்டர் கிஷோர் இந்தப் படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். மோகன் ராஜா பாடல்களை எழுதுகிறார்.
பத்திரிக்கை தொடர்பு பணிகளை ஸ்ரீதர் மற்றும் உதயா இருவரும் மேற்கொண்டுள்ளனர்..
படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் 31-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக் குழுவினர் அறிவித்து டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.









