அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்-ஹன்ஸிகா நடிக்கும் புதிய படம்..!

அஹ்மத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்-ஹன்ஸிகா நடிக்கும் புதிய படம்..!

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் அஹமத் இயக்கத்தில் புதிய படம் உருவாகவுள்ளது. இந்தப் படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் 10-வது படமாகும்.

இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி மற்றும் ஏமி ஜாக்சன் நடிப்பில் ‘கெத்து’ படத்தை தயாரித்து வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ், தற்போது புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்தை  ‘என்றென்றும் புன்னகை’ படத்தினை இயக்கிய அஹமத் இயக்கவுள்ளார்.

கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கவிருக்கிறார்கள். உடன் பிரகாஷ் ராஜ், ராதாரவி, விவேக் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமான செலவில் நீதிமன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இன்னமும் பெயர் சூட்டப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜை நிகழ்வுடன் துவங்கியது. பொள்ளாச்சி, கோவை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

Our Score