ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கும் 12-வது படம் இன்று துவங்கியது

ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்கும் 12-வது படம் இன்று துவங்கியது

தனது ஒவ்வொரு படத்தின் மூலமும்  மாறுபட்ட கதையம்சங்களை கொண்டு தமிழ் சினிமாவில் வெற்றி பெறும்  இயக்குநரான சுசீந்திரனின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிப்பவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதியின் ரெட் ஜெயின்ட்  மூவிஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. ‘மன்மதன் அம்பு’, 7-ம் அறிவு’, ஒரு கல் ஒரு கண்ணாடி’, போன்ற வெற்றி படங்களை தந்த ரெட் ஜெயின்ட் மூவிஸின் 12-வது தயாரிப்பு இது. 

இந்தப் படத்தில் உதயநிதியுடன் விஷ்ணு விஷாலும் இணைந்து  நடிக்கிறார். ‘தள்ளி போகாதே’ பாடல் மூலம் ஒட்டு மொத்த தமிழ் இளைஞர்களின் மனதை கிறங்கடித்த மஞ்சிமா மோகன் இந்த திரைப்படத்தில் உதயநிதியுடன் கை கோர்த்துள்ளார். மேலும், பாலாஜி தரணிதரன் இயக்கி வரும் ‘ஒரு பக்க கதை’ படத்தின் கதாநாயகி மேகா ஆகாஷ், இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இதோடு படத்திற்கு இன்னும் அழகு சேர்க்கும்விதமாக D இமானின் இசையும், R.மதியின் ஒளிப்பதிவும், காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.

Our Score