ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் K.மாணிக்கம் தயாரிப்பில், நடிகர் விக்னேஷ் நடிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களத்தில், புதுமையான அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும் “ரெட் ஃபிளவர்” திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தேவசூர்யா ஒளிப்பதிவில் VFX இயக்குநர் பிரபாகரன் மேற்பார்வையில், VFX காட்சிகள் அற்புதமாக உருவாகி வருகிறது. கலரிஸ்ட் பிரான்சிஸ் சேவியரின் அற்புதமான வண்ணக் கோலத்தில் இப்படம் புது அனுபவம் தரும். மேலும் சந்தோஷ் ராம் இசை, ரசிகர்களை புதிய உலகிற்கு கூட்டிச் செல்லும். இப்படத்தின் இசை இந்திய சினிமாவில் ஒரு அடையாளமாக மாறும்.
எதிர்காலத்தை தத்ரூபமாக காட்டும் வகையில் இதன் VFX பணிகள் தற்போது உலகமெங்கும் பிரம்மாண்டமாகத் நடந்து வருகிறது இந்நிலையில், தற்போது ஹங்கேரிய இசைக் குழுவுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் ராம் இப்படத்திற்காக பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் துவக்கியுள்ளார்.
தமிழ் இசைத் துறையில் நம்பிக்கைக்குரிய புதிய திறமையான சந்தோஷ் ராம், மறக்க முடியாத மற்றும் புதுமையான ஒலிப்பதிவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்தத் திரைப்படத்தில் தனது முழுப் படைப்பாற்றலை செலுத்தி வருகிறார்.
இது குறித்து சந்தோஷ் ராம் கூறும்போது, “இது எனது முதல் படம் என்பதால், இசையை தனித்து நிற்கச் செய்ய வேண்டி, என் முழு உழைப்பையும் தந்து வருகிறேன். ரெட் ஃபிளவர் எதிர்காலத்தில் நடக்கும் கதை, எனவே சயின்ஸ் பிக்சனுக்கு ஏற்றவாறான புதுமையான ஆர்கெஸ்ட்ரா இசையை நவீன வகையில் உருவாக்க , ஹங்கேரிய இசைக் குழுவுடன் இணைந்து உருவாக்கி வருகிறேன்..” என்றார்.
இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறும்போது, “இந்தப் படத்தின் பின்னணி இசையில் புதுமையை தரும் நோக்கத்தில், ஒவ்வொரு பிரேமிலும் அதீத உழைப்பைத் தந்து வருகிறார். ரெட் ஃப்ளவருக்கு ஒரு தனித்துவமான ஒலியைக் கொண்டு வர அயராது உழைக்கிறார்,
ஹங்கேரிய இசைக் குழுவுடன் இணைந்து அவர் உருவாக்கும் இசை இந்திய இசைத் துறையில் மிகப் பெரும் அலைகளை உருவாக்கும். அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது. கண்டிப்பாக பார்வையாளர்களிடம் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
படம் ஒரு எதிர்கால உலகில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது, நம் இது வரலாற்று நிகழ்வுகளிலிருந்து எடுக்கப்பட்ட கதைக் கருவினை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.” என்றார்.