full screen background image

“சித்தர்களின் வாக்குதான் இந்தப் படத்தின் கதைக் கரு..” – ‘கடைசி உலகப் போர்’ படத்தின் இயக்குநர் தகவல்!

“சித்தர்களின் வாக்குதான் இந்தப் படத்தின் கதைக் கரு..” – ‘கடைசி உலகப் போர்’ படத்தின் இயக்குநர் தகவல்!

‘ஹிப் ஹாப்’ தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் ‘கடைசி உலகப் போர்’.  மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம்.

ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில்  நாசர், நட்டி, அனகா, என். அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், சிவா சாரா RA,FJ,குஹன் பிரகாஷ், ராக்கெட் ராஜேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர்: ஹிப் ஹாப் ஆதி, தயாரிப்பாளர்: ஹிப் ஹாப் ஆதி, தயாரிப்பு நிறுவனம் : ஹிப் ஹாப் தமிழா, ஒளிப்பதிவு : அர்ஜூன்ராஜா, இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் ஆதி, எடிட்டர்: பிரதீப் E ராகவ், கலை இயக்குநர் : R.K நாகு, சண்டை பயிற்சி : மகேஷ் மேத்யூ, பாடலாசிரியர் : ஹிப்ஹாப் ஆதி, விக்னேஷ் ஸ்ரீகாந்த், FOTTY SEVEN, சிவவாக்கியார், ஒலி வடிவமைப்பாளர் : ராகவ் ரமேஷ், ஹரி பிரசாத் M A, VFX : 85FX, ஆடை வடிவமைப்பாளர் : கீர்த்தி வாசன், தயாரிப்பு மேற்பார்வை : C. ஹரி வெங்கட், நிர்வாக மேலாளர் : T.N. கோகுல்நாத், S. பார்த்திபன், நிர்வாக தயாரிப்பாளர் : வாசுதேவன், பத்திரிக்கை தொடர்பு : சதீஷ் குமார்.

இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக் குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, “என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார், அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப் பார்த்தபோது, எனக்குக் கண்ணீர் வந்தது.

அதே போல்தான் என் தம்பிகளைப் பார்க்கும்போதும் வருகிறது. என்னிடம் வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு வந்து, இன்று தயாரிப்பு நிறுவனம்வரை வளர்ந்து  வந்திருப்பது மகிழ்ச்சி. ஆதியை மட்டும்தான் நான் அறிமுகப்படுத்தினேன், ஆனால் அவர் பல பேரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் படத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை எனக்குத் தருமளவு, என் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதைக்கு நன்றி. இன்னும் மென்மேலும் வளர என் வாழ்த்துகள்..” என்றார்.

 நடிகர் நட்டி (எ) நட்ராஜ் பேசும்போது, “இந்தப் படத்தில் என் பெயரிலேயே நடித்திருக்கிறேன். நானும் சுந்தர்.சி குடும்பத்திலிருந்து வந்தவன்தான். ஹிப் ஹாப் ஆதியைப் பார்த்து மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டுப் பிரமித்துவிட்டேன், இந்த வயதில், இப்படி ஒரு கதை எழுதி, எடுப்பது சாதாரணமல்ல, படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள்..” என்றார்.

நடிகர் தலைவாசல் விஜய் பேசும்போது, “இந்தப் படத்தில் மூன்று நாள்தான் நடித்தேன். இந்தப் படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது, பிரமிப்பாக இருக்கிறது. இந்த டீம் அத்தனை தெளிவாக இருக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும்போது  நம் பாராளுமன்றம்தான் நமக்கு ஞாபகம் வரும். படக் குழுவினருக்கு என் வாழ்த்துகள்..” என்றார்.

இயக்குநர், நடிகர் அழகம் பெருமாள் பேசும்போது, “புதுப்பேட்டைக்குப் பிறகு எனக்கு அமைந்த மிகச் சிறந்த படமாக இதைச் சொல்வேன். எல்லோருமே புதுப்பேட்டை மாதிரி ஒரு படம் வரவில்லையே எனக் கேட்பார்கள், அவர்களுக்கான பதில்தான் இந்தப் படம். புலிப்பாண்டி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன். புதுப்பேட்டையிலிருந்து, மாறுபட்ட வித்தியாசமான அரசியல்வாதியாக இருக்கும். இந்த மாதிரி படம் தமிழ் சினிமாவில் வந்ததே இல்லை. நிச்சயம் ஒரு கல்ட் சினிமாவாக இப்படம் இருக்கும். ஆதியைப் பார்த்துப் பிரமிப்பு வருகிறது. அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது அண்ணனாக என்னையும் ஏற்றுக் கொண்டதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்தக் குழு அத்தனை நுணுக்கமாக அயராத உழைப்பைத் தந்துள்ளனர். என் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி…” என்றார்.

நடிகர் சிங்கம் புலி பேசும்போது, “ஹிப் ஹாப் ஆதியை முதன் முதலில் சுந்தர்.சி சாருடன்தான் பார்த்தேன். உங்களை மிகவும் பிடிக்கும். என் முதல் படத்திலிருந்து உங்களை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டுமென ஆசைப்பட்டேன் என்றார். இந்தப்படத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என்றார். இந்தப் படத்தில் நடிக்கும்போது அத்தனை அக்கறையாகப் பார்த்துக் கொண்டார்.

ஒரு கமர்ஷியல் படத்தை எடுப்பதை விட்டுவிட்டு, கடைசி உலகப்போர் என ஒரு அழுத்தமான படத்தை எடுக்கும் அவரது மனதுக்கு வாழ்த்துகள். பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடக்கும்போது, ஆதிக்கு அம்மை வந்துவிட்டது ஆனாலும் ஷூட்டிங் வர்றேன் என்றார். ஆனால் நான்தான் அவரை சமாதானப்படுத்தி ஓய்வெடுக்க வைத்தேன்.  அவரது அர்ப்பணிப்பிற்கும் உழைப்பிற்கும் வாழ்த்துகள்..” என்றார்.

நடிகர் ஹரீஷ் உத்தமன் பேசும்போது, “ஹிப்ஹாப் ஆதி சினிமாவுக்கு வந்ததிலிருந்து, அவர் செய்த ஒவ்வொரு விசயத்திலும், ஏதாவது ஒரு நல்ல விசயத்தை சொல்லுணும் என்றுதான் செய்வார். இந்தப் படத்தில் நடிக்கும் முன், இப்படத்தில் ஃப்ரீ விஷுவல் காட்டினார். அதுவே எனக்குப் பிரமிப்பைத் தந்தது. அவர் எப்படித்தான் இவ்வளவு வேலை செய்கிறார் எனத் தெரியவில்லை,

இந்தப் படத்தில் பிரக்யோக் சிங் எனும் கேரக்டர் செய்துள்ளேன், தனி ஒருவனுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிங் கேரக்டர், பிஸிகலாக சவாலான கேரக்டர், உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இன்று ஹிப் ஹாப் தமிழா ஒரு பிராண்ட் என்பதை விட, ஒரு மூவ்மெண்ட் என்பதாகத்தான் பார்க்கிறேன். இளைஞர்கள் அவரை பின் தொடர்கிறார்கள். ஜீவாவும் ஆதியும் எனக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் வாழ்த்துகள்…” என்றார்.

நடிகர், நடன இயக்குனர் கல்யாண் பேசும்போது, “நான் நடித்து பல வருடமாகிவிட்டது. ஆதி சொன்ன பிறகு, இந்தப் படத்தில் நடித்தேன். இவ்வளவு சின்ன வயதில் மிக மெச்சூர்டாக படம் செய்வது, மிகப் பெரிய விசயம். மொத்த டீமும் அவ்வளவு சிரத்தையாக அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். இந்தப் படத்தில் நட்டி சாருடன் ஒரு நல்ல பாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி. படக் குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்..” என்றார்.

நடிகர் குமரவேல் பேசும்போது, “மீசைய முறுக்கு படத்திற்குப் பிறகு மீண்டும் ஹிப்ஹாப் ஆதியுடன் நடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. சுந்தர்.சி இரண்டு நல்ல மனமுள்ள இளைஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தில் அவரது மொத்த டீமும் அற்புதமாக உழைத்துள்ளார்கள்…” என்றார்.

நடிகர் இளங்கோ குமணன் பேசும்போது, “20 வயது ஆட்களை மட்டுமல்ல, 60 வயதில் என்னையும் அறிமுகப்படுத்தியது ஆதிதான். எனக்கு நடிப்பு தெரியாது, ஆனால் என்னை நடிகனாக்கியது அவர்தான். என்னை மிக மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார். சிவகுமாரின் சபதம் படத்தில் என்னை முழு நேரப் பாத்திரத்தில் நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் மீண்டும் ஒரு நல்ல பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். அவர் பயணத்தில் தொடர்ந்து நாங்களும் இருப்போம். அனைவருக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் சாரா பேசும்போது, “ஆதி ப்ரோ இயக்கி நான் ஹீரோவாக நடிச்சிருக்க படம், நான் இங்கு நிற்க காரணம் மூன்று பேர். என்னை அறிமுகப்படுத்திய லோகேஷ் கனகராஜ், என்னை உலகம் அறிய வைத்த ஆதி, என்னை பயன்படுத்தச் சொன்ன சுந்தர் அண்ணா மூவருக்கும் நன்றி. ஆதியுடன் வேலை பார்ப்பது அவ்வளவு எளிதாக இருக்கும், மிக ஃபிரண்ட்லியாக இருப்பார். சித்தர் ஜீவா ஆசையே இல்லாத மனிதனாக என்னைப் பிரமிக்க வைக்கிறார். எனக்கு இது மிக முக்கியமான படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.” என்றார்.

நடிகை அனகா பேசும்போது, “இது எனக்கு ஆதி உடன் இரண்டாவது படம், கதையே மிக வித்தியாசமாக இருந்தது, நடிக்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆதி தைரியம் தந்தார். மிக அழுத்தமான படம். மிகப் பெரிய நடிகர்கள் நடித்துள்ளார்கள், ஆதி மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார். நான் இதுவரை செய்யாத மிக வித்தியாசமான ரோல். படக் குழுவினரின் ஒத்துழைப்பில் ரொம்ப ஈஸியாக நடித்தேன். எல்லோருக்கும் நன்றி. ஜீவா முதல் படக் குழு அனைவருக்கும் நன்றிகள். இந்தப் படம் மிக மிக வித்தியாசமான படமாக இருக்கும் நன்றி..” என்றார்.

ஒளிப்பதிவாளர் அர்ஜூன் ராஜா பேசும்போது, “இந்தக் கதையைச் சொல்லும்போதே வித்தியாசமாக இருந்தது. புதிதாக ஒரு விசயத்தை முயற்சி செய்துள்ளோம். இப்போது நீங்கள் பார்க்கும் தியேட்டரில் ஸ்கோப் வரும், மிகப் புதுமையான அனுபவமாக இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றிகள்..” என்றார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசும்போது, “என்னை அறிமுகம் செய்த சுந்தர்.சி அண்ணா இங்கு வந்து எங்களை வாழ்த்தியது மகிழ்ச்சி. நட்டி சாருக்கு இப்படத்தில் மிக முக்கியமான ரோல், மிக சூப்பராக நடித்திருக்கிறார். சிங்கம் புலி அண்ணாவும் சிறப்பாக நடித்துள்ளார். சாரா, அனகா, அழகம்பெருமாள் என நிறையப் பேர் நடித்துள்ளார்கள். விஜயன் எனும் ஒரு துணை நடிகரை வில்லனாக நடிக்க வைத்துள்ளோம். அவர் கண்டிப்பாகப் பெரிய நடிகராக வருவார்.

இந்தப் படம் மற்ற படங்களிலிருந்து புதிதாக இருக்கும்.  இப்படி ஒரு படத்தை எடுக்க மிக முக்கிய காரணம் தொழில் நுட்பக் கலைஞர்கள்தான். அனைவருக்கும் என் நன்றிகள். அர்ஜூன் மிக அட்டகாசமான விஷுவலை தந்துள்ளார். ஏகப்பட்ட செட் ஒர்க், வார் சீக்வன்ஸ் செய்துள்ளோம். நாகு சார் அட்டகாசமாக வேலை பார்த்துள்ளார். எடிட்டர் பிரதீப் அற்புதமாக எடிட் செய்துள்ளார். எங்கள் டீம்தான் மொத்த வேலையும் செய்துள்ளோம். ஜீவாதான் விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளார்.

படம் தயாரித்த அனுபவமே புதிது தான். “சண்டையினால் ஆவதும் இல்லை.. அழிவதும் இல்லை” என்னும் சித்தர் வாக்குதான் இந்தப் படத்தின் அடிப்படை. நாம் சண்டையிட்டுக் கொண்டால் உலகம் அழிந்து போய் விடும் என்பதுதான் இப்படம். ரசிகர்களுக்குக் கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும்…” என்றார்.

இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Our Score