இயக்குநர் C.S.அமுதன் இயக்கத்தில், உருவாகிவரும் ‘ரத்தம்’ படத்தின் இரண்டாவது லுக்கும் வெளியாகியுள்ளது…!
இந்த ‘ரத்தம்’ படத்தை Infiniti Film Ventures நிறுவனத்தின் சார்பில் கமல் போரா, பங்கஜ் போரா, G.தனஞ்செயன், B.பிரதீப், ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும், நகைச்சுவை நடிகர் ஜெகன், நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் (Family man புகழ்), O.A.K.சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘தமிழ்ப் படம்’ புகழ் கண்ணன் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத் தொகுப்பைக் கவனிக்கிறார்.
ஃபர்ஸ்ட் லுக் போலவே, இந்த இரண்டாவது லுக்கும் வித்தியாசமானதாக, ஆர்வத்தை தூண்டும்படி அமைந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் இந்தப் படத்திற்கு வலுவான தாக்கத்தையும் நல்ல எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய லுக் அந்த எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
இது குறித்து இயக்குநர் C.S.அமுதன் பேசும்போது, “இந்த ‘ரத்தம்’ படம் இதுவரையிலும் தமிழ் திரையில் சொல்லப்படாத கதையை விவரிக்கும் ஒரு க்ரைம் டிராமா. இத்திரைப்படம் நாம் தினமும் பார்க்கும் ஒன்றைத்தான் முன் வைக்கிறது, ஆனால், சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் ஒரு போதும் உணரவில்லை என்பதே உண்மை.
‘தமிழ்ப் படம்’ தொடரில் இருந்து இந்த ‘ரத்தம்’ படம் மிகவும் வித்தியாசமானது. ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படங்களின் மூலம் இக்குழு நகைச்சுவையால் ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும் இந்தப் படம் அதிலிருந்து மாறுபட்டு ஒரு அட்டகாசமான க்ரைம் திரில்லர் படமாக இருக்கும்…” என்றார்.
இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் சிங்கிள் ரிலீஸ், ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.









