full screen background image

ஏ.ஆர்.முருகதாஸின் ‘ரங்கூன்’ படத்திற்கு இன்னமும் ஹீரோயின் கிடைக்கலையாம்..!

ஏ.ஆர்.முருகதாஸின் ‘ரங்கூன்’ படத்திற்கு இன்னமும் ஹீரோயின் கிடைக்கலையாம்..!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் நிறுவனமான ஏ.ஆர்.எம் புரொடெக்சன்ஸ் நிறுவனமும், பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் இடையே ஏகோபித்த வரவேற்பு இருக்கிறது.

அவர்களது கூட்டணியில் உருவாகும் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு ‘ரங்கூன்’. கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க அனிருத் இசை அமைக்க உள்ள இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் ராஜ்குமார் பெரியசாமி. இவர் இயக்குனர் முருகதாசிடம் ‘துப்பாக்கி’ படம்வரையிலும் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

rajkumar periasamy

‘ரங்கூன்’ படத்தை பற்றி தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்ட ஹீரோ கௌதம் கார்த்திக், “பாக்ஸ் ஸ்டார், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாகும். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தன்னுடைய கதை சொல்லும் நேர்த்தியாலும் , தனக்கு தேவையானதை கிடைக்கும்வரை தளர்வடையாத குணத்தாலும் என்னை மிகவும் கவர்ந்து உள்ளார். அனிருத்தின் இசையில் நடிப்பது என்ற எண்ணமே என்னை மேலும் உற்சாகமூட்டுகிறது…” என்றார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில், “பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மூலமும், முருகதாஸ் சாரின் மூலமாகவும் அறிமுகமாவது எனக்கு மிக பெரிய பெருமையாகும். வரும் அக்டோபர் மாதம் ஷூட்டிங் துவங்க உள்ள ‘ரங்கூன்’ படத்தின் கதாநாயகி தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

இது இளைஞர்களை பற்றிய இளைஞர்களுக்கான படம். என்னுடைய அபிப்ராயத்தில் கௌதம் கார்த்திக் இன்றைய இளைஞர்களின் அப்பட்டமான பிரதிநிதியாவார். அவரது உற்சாகமும், வேகமும் படத்துக்கு உயிர் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பெயரை உச்சரித்தாலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும் இசையமைப்பாளர் அனிருத்தின் இசையமைப்பில், ஒளிபதிவாளர் எம்.சுகுமாரின் ரம்மியமான ஒளிப்பதிவில் நாங்கள் இணைந்து செயல்படும் ‘ரங்கூன்’ நிச்சயம் பேசப்படும் படமாக இருக்குமென நம்புகிறேன். எல்லா தரப்பு மக்களையும் ‘ரங்கூன்’ கவரும் என்பதிலும் எனக்கு ஐயமில்லை…” என்றார்.

Our Score