நடிகர் ரஹ்மானின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரணம்’ திரைப்படம்

நடிகர் ரஹ்மானின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரணம்’ திரைப்படம்

நடிகர் ரஹ்மான் தன்னுடைய தன்னிகரற்ற நடிப்புக்கு பெயர் போனவர். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. முக்கியமாக அவர் கதாநாயகனாக நடித்த ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெற்றியைப் பெற்றது.

தற்போது அவர் நடிகர் ப்ரிதிவிராஜின் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ரணம்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். ரஹ்மான்  இத்திரைப்படத்தில் ‘தாமோதர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இஷா தல்வார் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை நிர்மல் சஹாதேவ் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று யூடியுப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் Trending ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்த ‘ரணம்’ திரைப்படத்தின் டீஸர்  ‘தாமோதரின் Law of Survival’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரஹ்மான் மிகவும் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் தோன்றி தனது கதாபாத்திரத்தை பற்றி கூறுவதுபோல் இந்த டீசர் அமைந்துள்ளது. ப்ரிதிவிராஜும், ரஹ்மானும் நடித்துள்ளதால் இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.