‘கூத்தன்’ படத்திற்காக பாடல் பாடிய நடிகை ரம்யா நம்பீசன்..!

‘கூத்தன்’ படத்திற்காக பாடல் பாடிய நடிகை ரம்யா நம்பீசன்..!

‘பாண்டிய நாடு’ படத்தில் இடம் பெற்ற ‘பை பை பை கலாச்சி பை’ என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்த பாடலை பாடிய நடிகை  ரம்யா நம்சபீன் தற்போது ‘கூத்தன்’ என்ற திரைப்படத்தில்  மீண்டும் பாடியுள்ளார்.

நீல்கிரிஸ் ட்ரீம்  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ‘கூத்தன்’ திரைப்படம்  சினிமா நடனக் கலைஞர்களின் வாழ்க்கையையும், துணை நடிகர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் சொல்கிற  திரைப்படமாகும். 

இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் ராஜ்குமார். இவருக்கு வில்லனாக பிரபுதேவாவின் தம்பியான நாகேந்திர பிரசாத் நடித்திருக்கிறார். ஹீரோயின்களாக ஸ்ரீஜீதா, கிரா மற்றும் சோனா ஆகிய மூன்று புதுமுக நாயகிகள் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் A.L.வெங்கி. 

‘சூரன்’ மற்றும் பல கன்னட படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் பாலாஜி இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில்தான் நடிகை ரம்யா நம்பீசன் ஒரு புத்துணர்ச்சி தரக் கூடிய பாடலை பாடியுள்ளார். துள்ள வைக்கும் குத்து நடனம் கலந்த இந்தப் பாடலை கவிஞர் விவேகா எழுதியுள்ளார். ‘ஓடு ஓடு காதல் காட்டுமிராண்டி’ என்று துவங்கும் இந்தப் பாடலை நடிகை ரம்யா நம்பீசன் மிக அருமையாக தனது வசீகர குரலில் பாடியுள்ளார். 

இந்தப் பாடலை பாடிய அனுபவம் பற்றி ரம்யா நம்பீசன் பேசம்போது, "இசை அமைப்பாளர் பாலாஜியின் இசையில் நான் முதல்முறையாக பாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.  

இதற்கு முன்பு பல மொழிகளில் நான் பாடி இருந்தாலும், இந்தப் பாடலில்  ஒரு சில வார்த்தைகளை உச்சரிக்க ஆரம்பத்தில் கஷ்டப்பட்டேன். பாடலாசிரியர் விவேகா பாடல் ஒலிப்பதிவின் போது உடனிருந்ததால் அவரது உதவியுடன் சிறப்பாக பாட முடிந்தது.

கடந்த சில தினங்களாக தொண்டைக் கட்டு இருந்தபோதும், துள்ளல் மிகுந்த இப்பாடலைப் பாடிப் பழகியதும் சோர்வு நீங்கி சிறப்பாக பாடி முடித்தேன்..." என்றார் உற்சாகமாக.