ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்குக் கயிற்றில் இருந்து உச்சநீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டு.. தமிழக அரசால் விரைவில் சிறையில் இருந்து வெளியில் வரப் போகும் தமிழர்களை எண்ணி கடந்த 2 நாட்களாக தமிழகமே கட்சி வேறுபாடின்றி சந்தோஷமடைந்திருக்கும் சூழலில் எதிர்ப்புகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த வரிசையில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான நடிகை ரம்யா இந்த விடுதலையை கடுமையாக எதிர்த்துள்ளார்.
“அந்தக் கொலைச் சம்பவத்தில் ராஜீவ்காந்தி மட்டுமே கொல்லப்படவில்லை. மற்ற பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்படியிருக்க எப்படி விடுதலை செய்ய முடியும்..? என்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ரம்யா, ‘குத்து’ ரம்யா என்று கோடம்பாக்கத்தில் அழைக்கப்படுபவர். ‘குத்து’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர். தொடர்ந்து ‘கிரி’, ‘பொல்லாதவன்’, ‘தூண்டில்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘சிங்கம்புலி’ போன்ற படங்களில் நடித்தவர். இப்போது ‘காதல் டூ கல்யாணம்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ரம்யா, மிக இளம் வயதில் எம்.பி.யானவர் என்ற சாதனையைப் படைத்தவர். இப்போது இந்த கமெண்ட் மூலமாக வரும் தேர்தலிலும் இதே தொகுதிக்கு இவருக்கு சீட் கன்பார்ம் என்றே தெரிகிறது..!
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..!