full screen background image

ஆண்ட்ரியா லவ் முடிஞ்சு போச்சு – அனிருத்தின் ஒப்புதல்..!

ஆண்ட்ரியா லவ் முடிஞ்சு போச்சு – அனிருத்தின் ஒப்புதல்..!

கொல வெறி பாடலைவிடவும் ஒரே நைட்ல  இந்தியா முழுக்க பல ஆண்களின் பொறாமைக் கண்களுக்கு பலியானார் இசையமைப்பாளர் அனிருத். அது அவரும், நடிகை ஆண்ட்ரியாவும் இருந்த ஒரு புகைப்படத்தால் வந்தது..!

அனிருத் மீது ஏற்பட்ட பொறாமை புகைச்சல் அதனால் வந்ததில்லை. அப்போது அனிருத்தின் வயது இருபதுதான். இதுதான் பலரது பொறாமைக்கும் காரணம். கடந்த வாரம் விஜய் டிவியில் பேசிய நடிகை ஆண்ட்ரியா.. தான் அப்போது அனிருத்தை காதலித்ததாக ஒப்புக் கொண்டு.. “அது முடிஞ்சு போச்சு.. ஜஸ்ட் தேட் டைம் லவ்..” என்று சொல்லி அடுத்த மேட்டருக்குத் தாவி விட்டார்..

இப்போது அனிருத் முறை. “ஆண்ட்ரியாவை லவ் பண்ணினது உண்மைதான். அது ஒரு காலம்.. அது முடிஞ்சு போச்சு. அதைப் பத்தி இனிமேலாவது பேசுறதை விடுங்க…” என்று நேற்றைய ‘குமுதம்’ பேட்டியில் சொல்லியிருக்கிறார்.  சரி.. விட்டிரலாம் பாஸ்..  ஆனா அடுத்துச் சொல்லியிருக்கீங்க பாருங்க.. இதுதான் மேட்டர்..

“இப்போ மேரேஜ் பண்ற எண்ணமே என் மைண்ட்ல இல்ல. முப்பது வயசுலதான்னு டார்கெட் வைச்சிருக்கேன். இப்ப இருபத்திரண்டுதான் ஆகுது. பர்ஸ்ட் ஒரு பெண்ணை தேடிப் பிடிச்சு லவ் பண்ணணும். இப்ப நிறைய ப்ரொப்பசல்ஸ் வருது. அது எல்லாமே என்னோட இசைக்குத்தானே தவிர.. எனக்கில்லை. நான் என்ன ஸார்..? சட்டையைக் கழட்டிட்டா மொத்தமா பத்து கிலோகூட இருக்க மாட்டேன். என்ை எந்தப் பொண்ணுக்குப் பிடிக்கும்.. சொல்லுங்க..?” என்று உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார் அனிருத்.

தன்னை உணர்ந்தவன் தரணியில் வாழ்வான்னு சொல்வாய்ங்க.. நீங்க இதையே பாலோ பண்ணுங்க ஸார்.. 

Our Score