full screen background image

கொல்லூர் மூகாம்பிகையம்மன் கோவிலில் ரஜினி..!

கொல்லூர் மூகாம்பிகையம்மன் கோவிலில் ரஜினி..!

சூப்பர் ஸ்டார் ரஜினி நேற்று கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டார்.

‘லிங்கா’ படத்தின் ஷூட்டிங்கிற்காக கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் முகாமிட்டிருக்கிறார் ரஜினி. கடந்த 15-ம் தேதி முதலே அந்தப் பகுதியில்தான் ஷூட்டிங் நடந்து வருகிறது.

நேற்று கிடைத்த ஒரு நாள் இடைவெளியில் உடுப்பி மாவட்டத்தில் இருக்கும் கொல்லூர் மூகாம்பிகா கோவிலுக்கு வருகை தந்தார் ரஜினி.

rajini-kollur-2

முன்கூட்டியே கோவில் நிர்வாகத்திற்கு முறைப்படி தகவல் சொல்லிவிட்டதால் கோவில் நிர்வாகத்தினர் ரஜினியை மரியாதையோடு வரவேற்று தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் ரஜினியின் திடீர் பிரவேசத்தையும் தரிசித்திருக்கிறார்கள். ஆனால் ரசிகர்களால் ரஜினியின் கோவில் வழிபாடுகளுக்கு எந்த இடையீறும் ஏற்படவில்லையாம்..

rajini-kollur-1

அம்மனை வழிபட்டுவிட்டு சிறிது நேரம் கோவிலிலேயே இருந்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார் ரஜினி.  ரஜினியுடன் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும் உடன் சென்றிருந்தார்.

 

Our Score