ஆச்சரியமாக இருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தடு்தத நடவடிக்கைகள்..!
ஒரு பக்கம் இவரது சம கால போட்டியாளர் சகலகலாவல்லவர் கமல்ஹாசன் வரிசையாக 3 படங்களை ரிலீஸுக்கு தயார்படுத்த.. திடீரென்று லிங்காவை துவக்கி அதில் நடித்து முடித்திருக்கும் ரஜினி, அடுத்து தெலுங்கு படத்தில் நடிக்கப் போகிறாராம்..!
தெலுங்கில் சூர்யநாராயணராவ் என்ற தயாரிப்பாளர் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ரஜினி ஒத்துக் கொண்ட விஷயம் இன்றைக்கு வெளியில் வந்துள்ளது.
படத்தின் தயாரி்பபாளர் சென்னை வந்து ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து இது பற்றி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதே படத்தில் தெலுங்கின் இளைய சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் நடிக்கிறாராம். இரண்டு ஹீரோக்கல் சப்ஜெக்ட்டாம்..! எப்படி ரஜினி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை..
ரஜினி நடிப்பில் கடைசியாக 2008-ம் ஆண்டு ‘குசேலன்’ படத்தின் தெலுங்கு பதிப்பு ‘கதாநாயகடு’ வெளியானது..
நேரடி தெலுங்கு படமெனில் 1995-ல் ‘நாட்டாமை’யின் தெலுங்கு ரீமேக்கான ‘பெத்தராயுடு’வில் தமிழில் விஜயகுமார் செய்திருந்த கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த வயதிலும் கமலும், ரஜினியும் இப்படி ஓடுவதை பார்த்தாவது இப்போதைய இளம் ஹீரோக்கள் வருடத்திற்கு 2 படத்திலாவது நடித்தாக வேண்டும்..!