கோச்சடையானோட நடிப்பை நிறுத்திக்கலாம்னு பாக்க்குறேன்-ரஜினி..!

கோச்சடையானோட நடிப்பை நிறுத்திக்கலாம்னு பாக்க்குறேன்-ரஜினி..!

இயக்குநர் கே.பாக்யராஜ் சமீபத்தில் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது கோச்சடையான் படத்துக்குப் பின் நடிப்பதை நிறுத்திக் கொள்ள தான் நினைத்திருப்பதை பாக்யராஜிடம் சொன்னாராம். இது பற்றி கே.பாக்யராஜ் இன்று வெளிவந்த ‘ஜூனியர்விகடன்’ பத்திரிகையில் பேட்டியளித்திருக்கிறார்.

rajini-bakyaraj

அதிலிருந்து சில பகுதிகள் ம்டடும்..

”தமிழ் சினிமாவுல யங் ஸ்டார்ஸ் நிறைய பேர் நடிக்க வந்துட்டாங்க. இனி நான் தொடர்ந்து நடிச்சு என்ன ஆகப் போகுது? அதனால, ‘கோச்சடையான்’ படத்தோட நடிப்பை நிறுத்திக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க…’ என்று படபடன்னு பேசினார் ரஜினி.

நான் அதிர்ந்துட்டேன். ‘என்ன ரஜினி திடீர்னு இப்படிப் பேசுறீங்க… உங்களுக்கு என்னாச்சு? உங்ககூட ஆரம்பத்துல இருந்து சினிமாவுல நடிக்க வந்தவங்க நிறைய பேர் இப்போ ஃபீல்டுலயே இல்லை. இருக்கிற சிலரும் அப்பா, சித்தப்பான்னு சின்னச் சின்ன ரோல் பண்ணிட்டு இருக்காங்க. அப்போ இருந்து இப்போவரைக்கும் சூப்பர் ஸ்டார்னா அது நீங்க மட்டும்தான். இந்தப் பெருமையும், புகழும் வேற யாருக்கும் கிடைக்காது. உங்க உதட்டுல இருந்து வரும், ஒவ்வொரு வார்த்தைகளையும் தமிழ் மக்கள் ரசிச்சு, ரசிச்சு சந்தோஷப்படுறாங்க. இப்போ எதுக்கு நீங்க நெகட்டிவா யோசிக்கிறீங்க? ‘கோச்சடையான்’ வெளியானதும் நீங்க அடுத்த படத்துக்கான அறிவிப்பை உடனே வெளியிடணும்’னு சொன்னேன்.

அதுக்கு ரஜினி, ‘உங்ககிட்ட சொன்ன இதே விஷயத்தை அமிதாப் சார்கிட்டயும் சொன்னேன். அவரும் இதே பதிலைத்தான் சொன்னாரு. எப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி பேசுறீங்க’னு கேட்டு குழந்தை மாதிரி சிரிச்சாரு.”

தமிழில் எந்த நடிகருக்கும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு ரஜினியின் படத்துக்கு மட்டுமே உண்டு.. அவருக்கு ஏன் இந்த விபரீத ஆசை..? வடக்கில் அமிதாப்பச்சன் செய்யும் வயதுக்கேற்ற வேடங்களைக்கூட செய்யலாமே..? என்ன இருந்தாலும் சிங்கம் சிங்கிளா வந்தால்தான் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்கிறார்கள். அப்படியும் அவருடைய ஆஸ்தான இயக்குநர்களுக்கு வருடத்திற்கு ஒரு கமர்ஷியலாகவே கொடுத்தாலே போதும்தான்..

ரஜினியின் வேக நடைக்கு இதுவரையிலும் யாரும் ஈடு கொடுக்க முடியாது என்பார்கள்.. அந்த வேகம் இருக்கும்வரையிலும் அவர் தொடர்ந்து நடிக்கலாம்.. நடிக்க வேண்டும்..!

கோச்சடையான் படத்தையடுத்து கன்னட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாகவும் செய்திகள் உலா வருகின்றன. ஒருவேளை இதுவும் உண்மைச் செய்தியெனில் இதுவும் சந்தோஷமே..!

Our Score