“என் வீட்டுக் கதவு உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்…” – ரஜினியின் திடீர் அறிவிப்பு..!

“என் வீட்டுக் கதவு உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்…” – ரஜினியின் திடீர் அறிவிப்பு..!

தென்னிந்திய சினி டிவி ஸ்டண்ட் டைரக்டர்ஸ் ஆர்டிஸ்ட் யூனியனின் பொன்விழா நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் ரஜினிகாந்த், சிவக்குமார், பாலகிருஷ்ணா, மோகன்லால், இயக்குநர் ஷங்கர்,  சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, தியாகராஜன், பிரசாந்த், சிவகார்த்திகேயன்,  ஜீவா, விக்ரம் பிரபு, விவேக், விஜய் சேதுபதி, ஆர்யா, ஆரி, சிபிராஜ், ஜெகன், மயில்சாமி, டி.பி.கஜேந்திரன், விஷ்ணு மஞ்சு,  சத்யஜோதி தியாகராஜன், பி.எல்.தேனப்பன், கதிரேசன், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா,  மாலாஸ்ரீ, சித்ரா லட்சுமணன், எச்.முரளி, ராஜேஷ், தரணி, எஸ்.ஏ.ராஜ்குமார், காஜல் அகர்வால், ஸ்ரேயா, டாப்சி, நிக்கி கல்ராணி, ரம்யா நம்பீசன்,  இனியா, சுஹாசினி,  பூர்ணா,  கேத்தரின் தெரேசா,  ஐஸ்வர்யா ராஜேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர்,  பி.வி.பிரசாத் உட்பட ஏராளமானவர்கள்  பங்கேற்றனர்.

rajini-2

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது, “நான் சின்ன வயதில் படம் பார்க்கும்போது படத்தில் எத்தனை பைட் இருக்கு..?  எத்தனை ரீல் படம்..? என்றுதான் முதலில் பார்ப்பேன்.

ஒரு படத்துக்கு தயாரிப்பாளர், இயக்குநர் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானவர்கள் சண்டை கலைஞர்கள்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட இந்த யூனியனின் பொன் விழாவை அவரது நூற்றாண்டின்போது கொண்டாடுவது மிகப் பொருத்தம்.

எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவைவிட்டு விலகியபோதுகூட சண்டை கலைஞர்கள் பல பேருக்கு மாத சம்பளம் கொடுத்து உதவினார்.

உலகம் முழுவதும் ஆக்‌ஷன் படங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பும், வசூலும் இருக்கு. சினிமாவில் எல்லோரும் வியர்வை சிந்தி உழைக்கிறார்கள். ஆனால் சண்டை கலைஞர்கள் மட்டும்தான் தங்களது உயிரையே பணயம் வைத்து உழைக்கிறார்கள். வியர்வையுடன், தங்களது ரத்தத்தையும் சிந்தி உழைக்கிறார்கள்.

சண்டை கலைஞர்கள் அனைவரும் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பின்போது காட்டும் அக்கறையை, உங்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும். படிக்க வைப்பதிலும் காட்டுங்கள்.

உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டுமானாலும் என்னிடம் வந்து கேளுங்கள். என் வீட்டு கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்…” என்றார்.

விழாவில் மூத்த ஸ்டண்ட் கலைஞர்களுக்கும், ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கும் கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஸ்டண்ட் கலைஞர்களின் மேடை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது.

யூனியனின் தலைவர் அனல் அரசு,  மற்றும் பொருளாளர் ஜான், செயலாளர் செல்வம் மற்றும் அனைத்து ஸ்டண்ட் கலைஞர்களும் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

மொத்த நிகழ்ச்சியையும் டான்ஸ் மாஸ்டர் கலா வடிவமைத்திருந்தார்.

Our Score