மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘திருஷ்யம்’ படம் ரிலீஸான சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் இந்தப் படத்தை ஆர்வத்துடன் வந்து பார்த்தார். பார்த்த வேகத்தில் படம் ‘சூப்பர்’ என்று சொல்லிவிட்டுப் போக ஒருவேளை தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் கடைசியில் இப்போது சூப்பர் ஆக்டர் கமல்ஹாசன்தான் நடிக்கப் போகிறார். இடையில் என்ன நடந்தது..?
இயக்குநரே பேசுகிறார். “ரஜினிக்கு படம் ரொம்பப் புடிச்சிருந்த்து. அவர் படம் பார்த்துக்கிட்டிருக்கும்போதே நான் அவரை கவனிச்சேன். ரசிச்சுப் பார்த்துக்கிட்டிருந்தவரோட முகத்துல சில காட்சிகளின்போது குழப்பம் தெரிஞ்சுச்சு. அவருக்காக அந்த ஸ்கிரிப்ட்டை மாத்துறதையும் அவர் விரும்பலை.. அதுனால வேணாம்ன்னாட்டாரு. அவருக்குள்ளேயும் இது மாதிரி காமன்மேன் படம் பண்ண ஆசை இருக்கு. ஆனா ரசிகர்களோட அன்பும், ஆதரவும்தான் அவரைத் தடுக்குது..” என்கிறார் இயக்குநர்.
ரஜினி இதில் நடிக்கத் தயங்கியதற்கு முக்கியக் காரணம்.. கிளைமாக்ஸில் போலீஸ் லாக்கப்பில் மோகன்லால் போலீஸாரிடம் அடி வாங்கிவிட்டு அழுவது போன்ற ஒரு காட்சி படத்தில் உள்ளது. அதை தனது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களோ என்ற சந்தேகம் வந்ததால்தான் ரஜினி இதிலிருந்து நழுவியதாகத் தெரிகிறது என்று சொல்கிறது ‘குமுதம்’..!
நன்றி : குமுதம்