ஜீரோ ரூல்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் DR.L.சிவபாலன் மற்றும் காபி சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ”உறு மீன்”.
இது ஒரு ஆக்சன் கலந்த திரில்லர் கதை. ‘சூது கவ்வும்’, ‘நேரம்’, ‘ஜிகர்தண்டா’ திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக அதிதி நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் காளி, வெங்கட், கலையரசன் மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கவிருக்கிறார். அச்சு இசையமைக்கிறார், ஸ்ரீசரவணன்-ஜி.மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார்கள். சக்திவேல் பெருமாள்சாமி என்ற புதுமுக இயக்குநர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் பூஜை நேற்று ஜீரோ ரூல்ஸ் அலுவலகத்தில் மிகச் சிறப்பான முறையில் நடந்தது. ‘அட்டக்கத்தி’ தயாரிப்பாளர் C.V. குமார் மற்றும் ‘பீட்சா’ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டனர். கார்த்திக் சுப்புராஜ் கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார். இதன் படப்பிடிப்பு மார்ச் 5-ஆம் தேதி சென்னையில் தொடங்கி, கோவை, ஹைதரபாத் ஆகிய இடங்களில் நடக்க இருக்கிறது