full screen background image

தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது

தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது

இந்தியாவின் சினிமா துறையில் மிக உயர்ந்த விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது.

இந்திய திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்த திரைக் கலைஞர்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படும் விருது தாதா சாகேப் பால்கே விருது’.

இந்திய திரைப்படத் துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே நினைவாக இந்த விருது 1969-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியத் திரையுலகில் பெரும் சாதனைகளைப் படைத்த பலருக்கு இதுவரை இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து இதுவரையிலும் எல்.வி.பிரசாத், நாகிரெட்டி, நாகேசுவரராவ், ராஜ்குமார், அடூர் கோபாலகிருஷ்ணன், டி.ராமாநாயுடு, கே.விஸ்வநாத்  உள்ளிட்டோர் இந்த விருதை வாங்கியுள்ளனர்.

1996-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகத்திலிருந்து நடிகர் சிவாஜிகணேசன் இந்த விருதைப் பெற்றார்.

2010-ம் ஆண்டு தமிழ்த் திரைப்பட இயக்குர் சிகரம் கே.பாலசந்தருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

2019-ம் ஆண்டுக்கான தாகா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த விருது வழங்கும் விழா இன்று காலை டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.

இந்தியக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இந்த தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கினார்.

இந்திய சினிமாவில் 45 ஆண்டுகள் சிறப்பாக பங்காற்றியதற்காக ரஜினியை கவுரவித்து இந்த விருது வழங்கப்பட்டது.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், மாப்பிள்ளை தனுஷ், பேரக் குழந்தைகள் ஆகியோருடன் கலந்து கொண்டார்.

விருதினைப் பெற்றுக் கொண்ட பிறகு ரஜினி பேசும்போது, “இந்த விருதை எனது குருநாதர் கே.பாலசந்தருக்கு சமர்ப்பிக்கிறேன். எனது அண்ணன் சத்யநாராயணன் கெய்க்வாடிற்கும், நண்பன் ராஜ்பகதூருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழ வைத்த தமிழ் ரசிகப் பெருமக்களுக்கும் எனது நன்றி…” என்றார்.

Our Score