full screen background image

ரஜினியைத் தொடர்ந்து மீனாவும் டப்பிங் பேசினார்..!

ரஜினியைத் தொடர்ந்து மீனாவும் டப்பிங் பேசினார்..!

அண்ணாத்த’ படத்தின் போஸ்ட் புரொடெக்சன்ஸ் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கொல்கத்தாவில் எடுக்கப்படவிருந்த சில காட்சிகள் அங்கேயிருக்கும் அரசியல் சூழல் காரணமாக சென்னையிலேயே செட் போட்டு படமாக்கியிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து படத்தின் நாயகனான சூப்பர் ஸ்டார் ரஜினி தனது பகுதிக்கான டப்பிங் பணியை 3 நாட்கள் இடைவிடாமல் தொடர்ந்து பேசி முடித்துக் கொடுத்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்த மற்றவர்கள் டப்பிங் பேசும் பணிகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக நடிகை மீனா இன்றைக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.

இனி அடுத்தடுத்து மற்றவர்களும் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்தால், இந்த மாத இறுதிக்குள்ளாக படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து படம் ரிலீஸுக்குத் தயாராகிவிடுமாம்.

ஆனாலும் படத்தை சாவகாசமாக தீபாவளியன்றுதான் திரைக்குக் கொண்டு வர சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தியேட்டர்கள் செப்டம்பர் 1-ம் தேதி திறக்கப்பட்டாலும் ரசிகர்கள் மீண்டும் கூட்டம், கூட்டமாக வருவதற்கு சிறிது காலதாமதமாகும். அதனால் தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படத்தைக் கொண்டு வந்தால் நிச்சயமாக கூட்டம் தானாக வரும் என்பது தயாரிப்பாளரின் கணிப்பு.

எப்படியோ தமிழ்த் திரையுலகம் மீண்டு வந்தால் சரிதான்..!

Our Score