ராஜேஷ்கண்ணாவின் வீடு 95 கோடிக்கு விற்பனை..!

ராஜேஷ்கண்ணாவின் வீடு 95 கோடிக்கு விற்பனை..!

ஹிந்தி திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜேஷ் கண்ணா 180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். ராஜேஷ் கண்ணாவுக்கு மும்பை கார்ட்டர் ரோட்டில் 6490 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான பங்களா வீடு உள்ளது. ‘ஆசீர்வாத்’ என்பது வீட்டின் பெயர். மும்பை கடற்கரை அருகில் இது அமைந்துள்ளது.

ராஜேஷ் கண்ணா கடந்த 2012-ம் ஆண்டு தனது 69-வது வயதில் மரணம் அடைந்தார்.  ராஜேஷ் கண்ணா 1973-ம் ஆண்டு நடிகை டிம்பிள் கபாடியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு டுவிங்கிள் கண்ணா, ரிங்கி கண்ணா என இரு மகள்கள் உள்ளனர்.

ராஜேஷ் கண்ணாவின் மரணத்திற்கு பின்பு அவருடைய உயிலின்படி இந்த வீடு அவருடைய இரண்டு மக்ளுக்கே சொந்தமானது. இந்த வீட்டை தங்களது அப்பாவின் பெயரில் அருங்காட்சியமாக மாற்றப் போவதாக சென்ற ஆண்டில் டிவிங்கிள் கண்ணா சொல்லியிருந்தார். 

ஆனால் இப்போது திடீரென்று இந்த வீட்டை விற்றுவிடலாம் என்று முடிவு செய்து விற்பனை செய்திருக்கிறார்கள். இதை வாங்க மும்பையில் உள்ள பெரும் பணக்காரர்கள் பலரும் போட்டியிட்டனர். இறுதியில் தொழில் அதிபர் ஷாஜி கிரன் ஷெட்டி என்பவர் 95 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.

இந்த வீடு பேய் வீடு என்று ராஜேஷ் கண்ணா காலத்திலேயே மும்பை வாழ் மக்களால் அழைக்கப்பட்டது. ராஜேஷ் கண்ணா தனது இறுதிக் காலம் வரையிலும் இதில் வசித்து வந்தாலும் அந்த பேய் வீடு என்கிற இமேஜ் குறையவே இல்லை. அதனால்தான் இந்த வீடு இவ்வளவு குறைந்த விலைக்கு விற்பனையாகியிருக்கிறது என்கின்றனர் மும்பை தொழில் வட்டாராம்..

உண்மையாகவே அந்த பகுதியில் இது போன்ற பெரிய பங்களா நிச்சயம் 200 கோடிக்கு மேல் போகும் என்கிறார்கள்.. பேயால் அடித்த லக்கி வாங்கியவருக்கு..!

மேலும் இந்த வீட்டை விற்பனை செய்யும் முடிவை எடுத்ததற்கு கடைசி காலத்தில் ராஜேஷ் கண்ணாவுடன் வாழ்ந்து வந்த அனிதா அத்வானி என்பவர் டிம்பிள் குடும்பத்திற்குக் கொடுத்த நெருக்கடியும் ஒரு காரணம்..

இவர் ராஜேஷ் கண்ணாவுடன் 8 ஆண்டுகளாக லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்தவர். ராஜேஷ் கண்ணாவின் மரண தினத்தன்றே அந்த வீட்டில் இருந்து டிம்பிள் குடும்பத்தினரால் வெளியேற்றப்பட்டார். ராஜேஷ் கண்ணாவின் இறுதி ஊர்வலத்தில்கூட வர கூடாது என்று தடுகப்பட்டு அனுப்பப்பட்டவர்.

இவர் இப்போது மும்பை நீதிமன்றத்தில் இந்த வீட்டில் தனக்கும் பங்கு இருக்கிறது என்று கூறி வழக்கு தொடுத்திருக்கிறார். இதனால்தான் அவசரம், அவசரமாக இந்த வீட்டை விற்று தலைவலியைத் தொலைக்க முடிவு செய்தார்களாம் டிம்பிள் குடும்பத்தினர்..!

ராஜேஷ் கண்ணா அனிதாவுக்கு எதையுமே கொடுக்காமல் இருந்திருப்பது பாலிவுட்டில் பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்திருக்கிறது.. பல பெண் அமைப்புகள் இந்த பிரச்சினையை அக்குவேறு, ஆணிவேறாக மும்பை பத்திரிகைகளில் அலசி வருகிறார்கள்.. தவறு செய்தவர் ராஜேஷ் கண்ணா.. இப்போது அனுபவிப்பது அனிதா.. ஆனால் சந்தோஷத்தில் ராஜேஷின் பிள்ளைகள்..!

Our Score