ராஜ் குந்த்ராதான் என்னை ஆபாசப் படத்தில் நடிக்கத் தூண்டினார் – நடிகையின் கண்ணீர் பேட்டி

ராஜ் குந்த்ராதான் என்னை ஆபாசப் படத்தில் நடிக்கத் தூண்டினார் – நடிகையின் கண்ணீர் பேட்டி

ஆபாச பட வழக்கில் சிக்கி ஜெயிலில் இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.

லேட்டஸ்ட்டாக நடிகை ஷெர்லின் சோப்ரா போலீஸிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ராஜ்குந்த்ரா தன்னைக் கட்டாயப்படுத்தி ஆபாசப் படத்தில் நடிக்க வைத்ததாக சொல்லியிருக்கிறார்.

போலீஸ் விசாரணைக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியிலும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில், “நான் நாயகியாக நடிக்கத்தான் பாலிவுட்டில் கால் வைத்தேன். முடியாவிட்டால் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவாவது மாறலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் டிராக் மாறி கவர்ச்சி நடிகையாக மாறியதற்கு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராதான் காரணம்.

நான் தவறான திசைக்கு செல்ல வழிகாட்டிய குருநாதர் அவர்தான். நிர்வாணம், ஆபாசமெல்லாம் ரொம்பவும் சாதாரணமானது என்று சொல்லி என்னை அவர்தான் நம்ப வைத்தார். “எல்லோரும் அப்படித்தான் நடிக்கிறார்கள். நீயும் அப்படி நடிக்க வேண்டும்” என்று என்னை வற்புறுத்தினார்.

ஆரம்பத்தில் கவர்ச்சி வீடியோக்களுடன் தொடங்கி இறுதியில் ஆபாச வீடியோக்களை படமாக்கினார். “எனது மனைவிக்கு உங்களின் கவர்ச்சி வீடியோக்கள் அதிகம் பிடித்துள்ளது. அவர் உங்களை மிகவும் பாராட்டினார்” என்றார் ராஜ் குந்த்ரா. பெரிய நடிகையான ஷில்பா ஷெட்டி பாராட்டியதால் எது சரி, எது தவறு என்று புரியாமல் நானும் இந்த ஆபாச உலகத்தில் சிக்கி கொண்டேன்…’’ என்று கூறியுள்ளார் ஷெர்லின் சோப்ரா.

Our Score