நடிகை ரகுல் ப்ரீத் சிங் தான் ஹிந்தியில் நடிக்கும் ‘Chhatriwali’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் வெளியானவுடனேயே டிரெண்ட்டாகிவிட்டது.
காரணம், போஸ்டரில் ஒரு காண்டம் பாக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு அதைக் கிழிப்பதுபோல நடிகை ரகுல் பிரீத் சிங் போஸ் கொடுத்திருப்பதுதான்.
‘Chhatriwali’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரகுல் பிரித் சிங் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் டெஸ்டர் ஆக நடிக்கிறார். இதனால்தான் இப்படியொரு வித்தியாசமான போஸ்டரை வெளியிட்டதாக படத்தின் இயக்குநர் சொல்கிறார்.
பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காத ஒரு பெண், காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் டெஸ்டர் வேலையில் சேர்ந்து அந்தப் பணியை அவர் எப்படி சவாலுடன் செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. முழுக்க. முழுக்க காமெடி கலந்து, எந்தவித ஆபாசமும் இல்லாமல் இந்த படத்தை உருவாக்கி வருவதாகவும் இந்த படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் தனக்கு பாலிவுட்டில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தரும் படமாக அமையும் என ரகுல் ப்ரீத் சிங் மிகவும் எதிர்பார்க்கிறாராம்.