full screen background image

“டிவிட்டரில் நானில்லை..” – மறுக்கிறார் இயக்குநர் ராகவா லாரன்ஸ்

“டிவிட்டரில் நானில்லை..” – மறுக்கிறார் இயக்குநர் ராகவா லாரன்ஸ்

பிரபலங்கள் சும்மா இருந்தாலும் பிரச்சினைதான். ஏதாவது எழுதினாலும், பேசினாலும் பிரச்சினையாகத்தான் இருக்கிறது. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் சமூகத்தில் பெரிதாகத் தொடங்கியதில் இருந்து பல பிரபலங்களின் பெயர்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது.

லேட்டஸ்ட்டாக மாட்டிக் கொண்டவர் ‘காஞ்சனா’ ஹீரோ கம் இயக்குநரான ராகவா லாரன்ஸ்தான்.

நேற்று அவருடைய பெயர் கொண்ட டிவிட்டர் அக்கவுண்ட்டில் தன்னுடைய அடுத்த படத்தின் தன்னுடன் ஜோடி போடப் போவது நஸ்ரியா என்று எழுதி வைக்க.. இந்தச் செய்தி வைரலாக பரவி கேரளாவையும் ஆட்டிவைத்துவிட்டது.

இப்போதுதான் திருமணம் முடிந்து அமைதியாக குடும்ப வாழ்க்கையில் இருக்கும் சின்னப் பொண்ணான நஸ்ரியாவுக்கு இது சங்கடத்தைக் கொடுக்க ராகவா லாரன்ஸுக்கும் நேற்றைக்கே இம்சை கூடிவிட்டதாம்.

வேறு வழியில்லாமல் இன்றைக்கு ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். அதில் “எனது பெயரில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் எதுவும் கிடையாது. எனவே அது மாதிரி எது எதில் எந்த செய்தி வந்தாலும் நம்பாதீர்கள்.. எனது படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்கிறார் என்று நானே ட்விட் செய்த மாதிரி நேற்று சோஷியல் மீடியாவில் செய்தி பரப்பப்பட்டது. எனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு துவக்கப்பட்டு இது மாதிரியான பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

நான் பேஸ்புக், ட்விட்டர் எதையும் உபயோகப்படுத்தவில்லை. மேற்கொண்டு இது மாதிரி தொடருமானால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று எச்சரித்துள்ளார். 

கேக்கணுமே..?

Our Score