அரசுப் பள்ளிகளின் தலையெழுத்தை மாற்ற விரும்பும் ஜோதிகா..!

அரசுப் பள்ளிகளின் தலையெழுத்தை மாற்ற விரும்பும் ஜோதிகா..!

நடிகை ஜோதிகாவின் நடிப்பில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில், அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘ராட்சசி’.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன்  நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. ‘நல்ல விமர்சனமும் கமர்சியல் ரீதியிலான வெற்றியும்’ என்ற பார்முலாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

அவரின் அடுத்த படமான ‘ராட்சசி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் படம் திரைக்கும் வர இருக்கிறது.

unnamed (1)

இயக்குநர் சை.கௌதம்ராஜ் படம் பற்றி பேசும்போது, “ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத்தான் இருப்பாங்க.. எனக்கு என்னோட நாலாங் கிளாஸ் ‘நிர்மலா டீச்சர்’,  ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு டீச்சரோட பேர் கட்டாயம் மனசில இருக்கும்.

நம்மளோட அந்த டீச்சர் பள்ளிக்கூடத்துல நடக்குற நடக்க வேண்டிய விசயங்களை எனக்கென்னன்னு இல்லாம எதிர்த்து நின்னு அத்தனை பேருக்கு முன்னாடி கம்பீரமா கேள்வி கேட்கும்போது, மனசுல தோணும்.. ‘இவங்கதான் என்னோட சூப்பர் ஹீரோயினி’-ன்னு.. அவங்கதான் இந்த டீச்சர் ‘ராட்சசி’ கீதா ராணி.

உங்களப் பொண்ணுப் பார்க்க வரட்டுமான்னு எந்த சூதுவாதும் இல்லாம டிரைலர்ல கேட்குற அந்த குட்டிப் பையனாத்தான் நாம எல்லோரும் இந்த கீதா டீச்சரைப் இருப்போம். காலேஜ் படிப்பைக்கூட எத்தனை வயசானாலும் எதாவது ஒரு வகையில படிக்க முடியும். ஆனால், ஸ்கூல் லைப் ஒரு தடவைதான். தியேட்டரவிட்டு வெளிய வரும்போது ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த நினைவுகளைத் இத்திரைப்படம் தரும்.

actress jyothika

கேள்வி கேட்டுட்டு அப்படியே  நிக்கிறவங்கள நாட்கள் நகர நகர மக்கள் மறந்துடுவாங்க. ஆனா யாரு செயல்ல அதைக் காட்டுறாங்களோ அவங்களைத்தான் வரலாறு பேசும். அதேபோல் கட்டாயமாக இந்த ‘ராட்சசி’யையும் இந்தத் தமிழ்நாடு பேசும்.

அரசுப் பள்ளியில மாற்றம் உருவாக்கப்படணும்ங்கிறது மாற்றுக் கருத்தே இல்லாம தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொருத்தரோட எண்ணமும், என்னோடதும் அதேதான். அதை திரை வடிவமா மாத்தியிருக்கேன்.

இதுல ‘ராட்சசி’யா ஜோதிகா மேடமைத் தவிர வேற யாரும் இவ்வளவு கச்சிதமா பண்ணிருக்க முடியாது, அது படம் பாக்கும்போது உங்களுக்கும் தெரியும். ஒரு கதையை தேர்ந்தெடுக்கும்போதும், அதை நடிக்கும்போதும் தனக்கு சமுதாயத்துல பொறுப்புணர்வு இருக்குன்னு முழுமையா நம்புறாங்க. அவங்க எப்பவும் ஜெயிச்சிட்டேதான் இருப்பாங்க.

‘ராட்சசி’ கதைய கேட்டதுல இருந்து நிறைய ஹோம்  ஒர்க் பண்ணாங்க, நிறைய டீச்சர்கிட்ட பேசுனாங்க. அவங்க டிரஸ்ஸிங், மேக்கப் சேஞ்ச், பாடிலாங்குவேஜ்னு அவ்வளவு டெடிகேசன், ‘ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி.’

வியாபார நோக்கத்துல கல்விய விக்க ஆரம்பிச்சவங்க, அரசுப் பள்ளிய மக்களோட பொதுப் புத்தியில வேற மாதிரியா உருவாக்கிட்டாங்க.

இப்ப தமிழ்நாட்டில இருக்குற பெரிய பெரிய சாதனையாளர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் பெரும்பாலானவர்களை உருவாக்குனது அரசுப் பள்ளிதான்னு அழுத்தம் திருத்தமா சொல்ல முடியும்.

கடந்த பத்து வருடங்கள்ள உருவான அடுத்த தலைமுறை பிரைவேட் ஸ்கூல்ல இருந்து அதிகமா வெளிய வந்தாங்க. தனியார் பள்ளி – அரசுப் பள்ளிங்கிற ஏற்றத்தாழ்வு  உருவாகியிருக்கவே கூடாது, அந்த எண்ணத்தை மாத்தணும்னு போராடுறவங்கதான் இந்த ‘ராட்சசி’ கீதா ராணி.

இந்த நோக்கத்தோட எத்தனையோ ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுக்க தனி ஆட்களா, அரசுப் பள்ளிய உயர்த்த போராடிகிட்டு இருக்காங்க, அவங்களுக்கு சல்யூட். இந்தப் படத்தோட ஹீரோ அவங்கதான்.

அரசுப் பள்ளிகளோட தரம் உயரணுங்கிறது அரசுப் பள்ளியில படிக்கிற பசங்களோட தரம் உயரணுங்கிறதுக்காகத்தான், அதை வலிமையாக பேச  இந்த மாதிரி ‘ராட்சசி’ங்க வந்தே ஆகணும்…” என்றார் தீர்மானமாக..!

Our Score