full screen background image

விரைவில் வருகிறது ‘ராஜ பீமா’ திரைப்படம்..! 

விரைவில் வருகிறது ‘ராஜ பீமா’ திரைப்படம்..! 

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மக்கள் அனைவருக்கும்  ‘ராஜ பீமா’ படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்து கொள்வதோடு படத்தின் தற்போதைய நிலை பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளனர்.

இந்த ‘ராஜ பீமா’ படத்தை சுரபி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.மோகன் தயாரித்துள்ளார்.

ஆரவ் மற்றும் அஷிமா நர்வால் இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும், நாசர், K.S.ரவிக்குமார், யாஷிகா ஆனந்த், யோகி பாபு, ஷயாஜி ஷிண்டே, பாகுபலி பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சைமன் K.கிங் இசையமைக்க, S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணா படத் தொகுப்பு செய்துள்ளார். மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, எழுத்து, இயக்கம் – நரேஷ் சம்பத்.

படம் பற்றி இயக்குநர் நரேஷ் சம்பத் பேசும்போது,”ராஜ பீமா’ படக் குழு சார்பில் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த திருநாள் விழா எங்கள் படத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. விநாயகராக நாம் வணங்கும் யானைமுகத்தான் எங்கள் படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார்.

தற்போது எங்கள் படத்திற்கான 95 சதவீத போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை முடித்துவிட்டோம். மிச்சமிருக்கும் பணிகளையும் மிக விரைவில் முடித்துவிடுவோம். தியேட்டர்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்தவுடன் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.

Our Score