full screen background image

இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கும் ‘ஆர்.கே.நகர்’ திரைப்படம்

இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கும் ‘ஆர்.கே.நகர்’ திரைப்படம்

வெங்கட் பிரபுவின் படங்களை பொறுத்தவரை புதுமையும், நகைச்சுவையும் உயிரும், உணர்வுமாக கலந்து ரசிகர்களை கவரும் தலைப்புகளோடு அமையும். இவை ஒருபோதும் வெங்கட் பிரபு என்ற இயக்குநரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடைத்ததே கிடையாது.

அவர் தன்னுடைய ‘பிளாக் டிக்கட் கம்பெனி’ சார்பில் தயாரிக்கும் ‘ஆர்.கே.நகர்’ படத்துக்கும் தன் படத்தை போலவே புதுமையான விஷயங்களை புகுத்தி ரசிகர்களிடம் கொண்டு செல்ல கடுமையாக உழைக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் ஒரு புதுமையான முறையில் படத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, ரசிகர்களை கவர்ந்ததோடு, சமீபத்தில் எல்லோராலும் பேசப்பட்ட ஒன்றை படத்தின் தலைப்பாக்கி, இன்னும் படத்தை அலங்கரித்திருக்கிறார் வெங்கட் பிரபு.

படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை வேட்பாளர்கள் என அறிமுகப்படுத்தி சமூக வலைத்தளங்களில் எளிதாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் வெங்கட் பிரபு.

தயாரிப்பாளர் வெங்கட் பிரபு வேட்பாளர்-1, இயக்குநர் சரவண ராஜன் (வடகறி புகழ்) வேட்பாளர்-2, தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி வேட்பாளர்-3 என தொடங்கி, மற்ற வேட்பாளர்களான வைபவ் (ஹீரோ), இனிகோ, சனா (ஹீரோயின்), சம்பத் (வில்லன்), வெங்கடேஷ் (ஒளிப்பதிவாளர்), பிரேம்ஜி (இசையமைப்பாளர்), பிரவீன்.கே.எல். (படத்தொகுப்பு), விதேஷ் (கலை இயக்குனர்) மற்றும் வாசுகி பாஸ்கர் (ஆடை வடிவமைப்பு) ஆகியோரையும் இதே முறையில் அறிமுகப்படுத்தியது இன்னும் சிறப்பு. 

venkat prabhu-1

இந்த புதுமையான விளம்பரங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த அபரிமிதமான வரவேற்பில் திளைக்கும் வெங்கட் பிரபு, தலைப்பை வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். 

“தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களை விளம்பரப்படுத்தி, ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியமான தேவை. சமூக வலைத்தளத்தில் எங்கள் ‘ஆர்.கே.நகர்’ படத்துக்கு கிடைத்த ஆதரவும், நேர்மறையான விமர்சனங்களும் எங்களை மலைக்க வைத்து விட்டன. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பை அதிகப்படுத்தி, நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என எங்களை ஊக்கப்படுத்தியுள்ளது…” என்கிறார் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு.

Our Score