full screen background image

சன்னி லியோன் நடிக்கும் ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது..!

சன்னி லியோன் நடிக்கும் ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது..!

ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன் நடித்துள்ள கொட்டேஷன் கேங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது..!

தயாரிப்பாளரும், இயக்குநருமான விவேக் குமார் கண்ணன்  Filminati Entertainment நிறுவனத்தின் காயத்திரி சுரேஷ் மற்றும் Sri Guru Jothi Films நிறுவனத்தின் G.விவேகானந்தன் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் கொட்டேஷன் கேங்’.

நடிகர் ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.,

மேலும், ரெட் ரெயின்’ புகழ் விஷ்னோ வாரியர், ‘ஜீ’ புகழ் அக்ஷயா, கியாரா, சோனல், கேதன் கரண்டே, சதீந்தர் & ஷெரின் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இந்த பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்தக் கொட்டேஷன் கேங் படத்தின்  தயாரிப்பாளரும், இயக்குநரான விவேக் குமார் கண்ணன் படம் பற்றிக் கூறுகையில், “எங்கள் கனவுத் திரைப்படமான இந்தக் ‘கொட்டேஷன் கேங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில், ஒரு குழுவாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

கடந்த வாரம்தான் திட்டமிட்டபடி  படப்பிடிப்பை முடித்தோம்.  காஷ்மீர், சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் பெரும் சவாலாக இருந்தது.

காஷ்மீரில் உள்ள ரோரிங் லயன்ஸ் நிறுவனம் மற்றும் மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மற்ற யூனிட்கள் இந்த முக்கியமான தொற்று நோய்க் கட்டத்திற்கு மத்தியில், இந்தத் திரைப்படத்தை முடிப்பதில் தூண்களாக இருந்ததற்காக படக் குழுவினர் மற்றும் தயாரிப்பு பிரிவுக்கு நன்றி.

ஜாக்கி ஷெராஃப், சன்னி லியோன், பிரியாமணி, பேபி சாரா மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன்  மற்ற காஷ்மீர் மற்றும் மும்பை நடிகர்களின் நடிப்பு படத்திற்கு மிக பெரும் பலத்தை தந்துள்ளது. இப்படம் நடிகர்களின் சிறப்பான நடிப்பையும், தொழில் நுட்பக் கலைஞர்களின் சிறந்த திறமையையும் கொண்டுள்ளது. தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது…” என்றார்.

இந்தக் கொட்டேஷன் கேங்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்றைக்கு வெளியானது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து, டிரெய்லர், ஆடியோ மற்றும் தியேட்டர் ரிலீஸ் தேதி குறித்த மற்ற அறிவிப்புகளை வெளியிட கொட்டேஷன் கேங்’ படத்தின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Our Score