P.V.P. நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஆர்யா, அனுஷ்கா, மாஸ்டர் பரத் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகும் இப்படத்தில் ஊர்வசி முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ருதி ஹாசன் கௌரவ தோற்றத்தில் வருகிறார்.
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், ஆனந்த் சாய் கலை இயக்கத்தை மேற்கொள்ள, இந்த நகைச்சுவை கலந்த காதல் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் M.M. கீரவாணி. சந்தீப் குன்னாம் நிர்வாக தயாரிப்பை மேற்கொள்கிறார். திருமதி கனிகா திலோன் கொவேலமுடி கதை, திரைகதை எழுத, இயக்குநர் பிரகாஷ் கொவேலமுடி இயக்குகிறார்.
இன்று ஹைதரபாத்தில் இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. படப்பிடிப்பை தெலுங்கு திரையுலகின் மூத்த இயக்குநர் திரு. ராகவேந்திர ராவ் இயக்க, திருமதி. PVP ஒளிப்பதிவு செய்ய, கனிகா திலோன் கொவேலமுடி கிளாப் அடித்து தொடங்கி வைத்தனர்.
ஏற்கெனவே இதே பி.வி.பி நிறுவனம் தயாரித்த ‘இரண்டாம் உலகம்’ படத்திலும் ஆர்யாவும், அனுஷ்காவும்தான் ஜோடியாக நடித்திருந்தனர். இது இந்த ஜோடிக்கு இரண்டாவது படமாகும்..!