பெண்களின் ஆதரவு குரலாக ஒலிக்க வரும் ‘புயலில் ஒரு தோணி’..!

பெண்களின் ஆதரவு குரலாக ஒலிக்க வரும் ‘புயலில் ஒரு தோணி’..!

B.G.பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ரோமிலா நல்லையா மற்றும் மஜீத் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘புயலில் ஒரு தோணி’.

புதுமுகங்களான ஸ்ரீசேது, ரேவதி தரண், கோபி கிருஷ்ணன் & ரித்திகா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ஜலீல் இயக்குகிறார். 

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஜேசன் வில்லியம்ஸ்  ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கில்டு சங்கத்தின் தலைவர் ஜாக்குவார் தங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

“பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப் படம் உருவாகிறது..” என்கிறார் படத்தின் இயக்குநர் ஜலீல்.