full screen background image

பட வெளியீட்டுக்கு முன்பேயே 250 கோடியை சம்பாதித்திருக்கும் ‘புஷ்பா’ திரைப்படம்

பட வெளியீட்டுக்கு முன்பேயே 250 கோடியை சம்பாதித்திருக்கும் ‘புஷ்பா’ திரைப்படம்

தெலுங்குலகின் ஸ்டைலிஷ் ஸ்டாரான அல்லு அர்ஜுனின் முதல் அகில இந்திய திரைப்படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படம் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இத்திரைப்படம் பட வெளியீட்டுக்கு முன்பேயே 250 கோடி ரூபாயை சம்பாதித்திருக்கிறது.

‘அலா வைகுந்தபுரமுலோ’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணி இந்த ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தில் இணைந்துள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுனின் சினிமா பயணத்தில் இந்த ‘புஷ்பா’ படம்தான் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.

முதல் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

 ‘அலா வைகுந்தபுரமுலோ’ வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லராக கூறப்படும் ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.

அணைத்து மொழிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அதிக விலைக்கு ஒரு முன்னணி ஓடிடி தளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

‘புஷ்பா: தி ரைஸ்’, படத்தின் முன் வெளியீட்டு வணிகம் இன்னும் அதிமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் மிகப் பெரிய அளவில் வெளியாக உள்ளதால், உலகளாவிய பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் தடம் பதிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சமீபத்தில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் ட்ரெய்லர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து வரவிருக்கும் விளம்பரங்களுடன், ‘புஷ்பா’ பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகள் புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த அகில இந்திய திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீலட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.

Our Score