பல வெற்றிப் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளரான அ.செ.இப்ராம்ஹிம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படம் ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்.’
‘மெளன ராகம்’ படத்தில் இடம் பெற்ற ‘சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா’ பாடலின் பல்லவியில் வரும் ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்ற வரிகளையே படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் பிரபல பின்னணிப் பாடகர் கிரிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் ‘வெண்ணிலா கபடி குழு’ நித்தீஷ், ‘பிசாசு’ பூஜா, மதுரை ஜானகி, ஹரீஷ் மூசா, விஜய்பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – செந்தில்மாறன்.ஆர் (இவர் பி.ஜி.முத்தையா, வெற்றி ஆகியோரது உதவியாளர்.)
இசை – ரைஹானா சேகர் (ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி)
பாடல்கள் – கவிஞர் வாலி, கங்கை அமரன்
எடிட்டிங் – ராஜாமுகமது
நடனம் – தினேஷ்
கலை – எஸ்.எஸ்.மூர்த்தி
தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.ஈ.ராஜேந்திரன்
தயாரிப்பு – இராவுத்தர் பிலிம்ஸ் A.S. இப்ராகீம் ராவுத்தர்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தம்பி செய்யது இப்ராஹிம். (இவர் ஆர்.மாதேஷ், தருண்கோபி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்)
படம் பற்றி பேசிய இயக்குநர் தம்பி செய்யது இப்ராஹீம், “இந்தப் படம் முழுக்க முழுக்க காதல் சம்மந்தப்பட்டது. எல்லோருக்கும் ஒரு முதல் காதல் கண்டிப்பாக இருக்கும். அந்தக் காதலில் இருந்த சில விஷயங்களை பின்னாட்களில் வெளியில் சொல்ல தயங்குவார்கள் அப்படி சொல்ல தயங்குகிற விஷயம்தான் இந்த படத்தின் கரு.
கவிஞர் வாலி கடைசியாக எழுதிய பாடல் இந்த படத்திற்காகத்தான். அதுவும் மரணம் சம்மந்தப்பட்ட பாடல்தான். படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், மதுரை அம்பாசமுத்திரம், ராஜபாளையம், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. 23 நாட்கள் மழையிலேயே பல காட்சிகள் எடுக்கப்பட்டன. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது..” என்றார்.