விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில், அறிமுக இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம், வரும் ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது.
ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரித்து இருக்கும் இந்த திரைப்படத்தை, ஜே.எஸ்.கே.பிலிம் கார்பொரேஷன் சார்பில் வெளியிடுகிறார் ஜே. சதீஷ்குமார்.
“ஒரு படத்தின் வரி விலக்கை குறைப்பதில் ‘U’ சான்றிதழுக்கு மிக பெரிய பங்கு உண்டு. அதைத் தவிர்த்து, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய திரைப்படம் என்கின்ற அங்கீகாரத்தை ரசிகர்கள் ஒரு திரைப்படத்துக்கு வழங்க வைப்பது ‘U’ சான்றிதழ்தான். தற்போது அந்த ‘U’ சான்றிதழை, ரெபெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து நாங்களும் பெற்றிருக்கிறோம்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் ஒரு திருவிழா, பொங்கல். அந்த நல்ல நாளில் அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் எல்லா சிறப்பம்சங்களையும் எங்கள் படம் உள்ளடக்கி இருக்கின்றது. அந்த நன்னாளில், ஜனவரி 13-ம் தேதிதான் எங்களது ‘புரியாத புதிர்’ படத்தை வெளியிடவும் நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்.
எங்களின் ‘புரியாத புதிர்’ திரைப்படத்திற்கு இப்போதே தமிழ்த் திரையுலகில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவே எங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி..” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஜே.சதீஷ்குமார்.