full screen background image

‘புலி’ திரைப்படத்தின் டிரெயிலரும் சாதனை படைத்தது..!

‘புலி’ திரைப்படத்தின் டிரெயிலரும் சாதனை படைத்தது..!

நேற்று முன்தினம் இரவில் வெளியிடப்பட்ட ‘புலி’ திரைப்படத்தின் டிரெயிலர் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

கடந்த 36 மணி நேரத்திற்குள்ளாக இந்த டிரெயிலரை யு டியூப் இணையத்தளம் மூலமாக 27 லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்திருக்கிறார்கள். இதுவொரு புதிய சாதனையாம். இப்போதுவரையிலும் இதனை பார்த்தவர்களின் எண்ணிக்கை 27,85,937-ஐ தொட்டிருக்கிறது. இதற்கு முன்பு ‘ஐ’ படத்தின் டிரெயிலர்தான் 85 லட்சம் பார்வையாளர்களை பார்க்க வைத்து முதலிடத்தில் இருக்கிறது.

‘புலி’ படத்தின் டிரெயிலருக்கு கிடைத்திருக்கும் லைக்குகளும் 70 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதற்கு முன்னர் தல அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மட்டுமே 67 ஆயிரத்தைத் தொட்டிருந்த்து. இப்போது அந்த சாதனையை இந்த ‘புலி’ படம் முறியடித்திருக்கிறது.

மேலும் விஜய்யின் பிறந்த நாளில் வெளியான ‘புலி’ படத்தின் டீஸரும் சாதனை படைத்திருக்கிறது. ‘புலி’ டீஸரை இதுவரையிலும் 71 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து மகிழ்ந்தனர். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ‘ஐ’ படத்தின் டீஸர்தான் மிக அதிக அளவு பார்வையாளர்கள் (1 கோடியே 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்) பார்த்த சாதனையைத் தக்க வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score