‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு

‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு

பொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG)’ படத்தில் இடம் பெறும் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமா வீடியோ வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அசாதாரண வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகையரை அறிமுகப்படுத்தும் காட்சியாக இப்பாடலின் ப்ரோமா வடிவமைக்கப்பட்டுள்ளது.

தாதா 87 படத்தை இயக்கிய  விஜய் ஸ்ரீஜி தான் தற்போது ‘பொல்லாத உலகின் பயங்கர கேம்'(PUBG) படத்தையும் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் புரட்சி செல்வி’ ஐஸ்வர்யா தத்தா, நடிகர் விக்ரமின் தங்கை மகன் அர்ஜூமன், அனித்ரா நாயர், ஆராத்யா, சான்ரியா, சாந்தினி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். லியாண்டர் லீ மார்ட்டின் இசையமைத்துள்ளார். விஜய் ஸ்ரீஜி பாடல்களை எழுதியுள்ளார்.

முண்டாசு கவி பாரதியாரின் ‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ’ வரிகளுடன் பாடலைத் துவக்கியுள்ளார் விஜய் ஸ்ரீஜி. இப்பாடலை, பிரபல ராப் இசைக் கலைஞர் ஃபைவ் ஓ  (Five O) பாடியிருக்கிறார். இவர் லாட்வியா நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய ஆல்பங்களான Aizejot’, ‘Citadaks Reps’, ‘Nothing Compares’, ‘Nesteijties’, ‘Vis Man Ir Arlauts’ மிகவும் பிரபலமானவை.

இப்படத்தின் பாடல்களை இசை வெளியீட்டில் தனி ட்ரெண்ட்டை ஏற்படுத்திவரும் டிரெண்ட் நிறுவனம்’ வெளியிடுகிறது. 

பாடல்கள், லாட்வியாவில் உள்ள ஜெனிஸ் ஸ்ட்ராம் ஸ்டூடியோஸ் (Janis Straume Studios) மற்றும் சிங்கப்பூரில் உள்ள அர்டாண்ட் ஸ்டீடியோஸில் (Ardant Studios) பதிவு செய்யப்படவுள்ளன.

வரும் தீபாவளியன்று படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது. பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் இசை சரவெடி தீபாவளி தினத்தில் ஆரம்பமாகிறது.

படம், உலகமெங்கும் 2021-ம் ஆண்டின் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது.