full screen background image

பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக் களமாக வைத்து உருவாகும் ‘எங்க குலசாமி’

பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக் களமாக வைத்து உருவாகும் ‘எங்க குலசாமி’

‘ஆர்யா என்டர்டெய்ன்மெண்ட்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘எங்க குலசாமி’.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி என்பவர் சில கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வரும்படி தொலைபேசியில் அழைத்ததாக 2 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் பெரும் பரபரப்பான செய்தி பரவியது.

அந்த வழக்கில் நிர்மலா தேவியும் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். அவருடைய வழக்கு இன்றைக்கும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

அந்தக் கதையை மையமாக வைத்துதான் இந்த ‘எங்க குலசாமி’ திரைப்படம் உருவாகிறது.

இந்தப் படத்தின் கதாநாயகனாக யூடியூப் புகழ் ‘ராக் ஸ்டார்’ ராஜகுரு அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு – ராஜா பட்டாசார்ஜீ, இசை – சாம் டி.ராஜ், அறிமுக இயக்குநரான விஜயகுமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

பேராசிரியையின் நயவஞ்சக பேச்சில் சிக்கி உயிரிழந்த தன் தங்கையின் மரணத்திற்கு நீதி கேட்டு சட்டத்தை ஹீரோ தன் கையிலெடுப்பதே கதையின் கரு.

மருத்துவக் கல்லூரியின் பின்னணியில் உருவாகும் இந்த கதை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது.

இறுதிகட்ட பணிகள் முடிந்து ஏப்ரல் இறுதியில் இத்திரைப்படம் OTT-ல் வெளியிடப்படவுள்ளது.

Our Score