full screen background image

“சினிமாவை அழிக்கும் நடிகர்கள்..” – தயாரிப்பாளர் டி.சிவாவின் அதிர்ச்சி பேச்சு.

“சினிமாவை அழிக்கும் நடிகர்கள்..” – தயாரிப்பாளர் டி.சிவாவின் அதிர்ச்சி பேச்சு.

“சில நடிகர்களே சினிமாவை அழிக்கிறார்கள்…” என்று தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜிடம் உதவியாளராக இருந்த ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ள படம் ‘54321’. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா  சென்னை பிரசாத் லேப் தியேட்டரில்  நேற்று மாலை நடந்தது. டிரெய்லரை தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

விழாவில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும்போது,. “எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் இந்த விழாவுக்கு வந்தேன் இந்த .’54321′ படத்தின் டிரெய்லரையும், பாடல் காட்சியையும் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. கார்த்திக் சுப்பராஜ் படமோ என்று நினைத்தேன். அவ்வளவு அற்புதமாக இருந்தது. முதிர்ச்சியுடன் இருந்தது. 

டிரெயிலர்காட்சிகளைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது இதுதான் இதில் நடித்த நடிகர்கள் பெரிய அளவுக்கு வளர வேண்டும் என்பதுதான். நாங்கள் இப்போது நான்கைந்து நடிகர்களிடம் மாட்டிக் கொண்டு படாதபாடுபடுகிறோம். புதிதாக பத்து கதாநாயகர்கள், பத்து கதாநாயகிகள் வந்தால்தான் தயாரிப்பாளர்களுக்கு நல்லது. பிரச்சினை இருக்காது. இவர்கள் வளர்ந்து தற்போதைய தயாரிப்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.

சினிமாவில் நடிகர்களில் இரண்டு ரகத்தினர் இருக்கிறார்கள். சினிமாவை  காக்கும் நடிகர்கள் ஒரு ரகம், சினிமாவை அழிக்கும் நடிகர்கள் இன்னொரு ரகம். இப்படி இருக்கிறது சினிமா. இந்தப் படத்தில் நடித்தவர்கள் வளர்ந்து தயாரிப்பாளர்களைக் காக்கும் நடிகர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்… இந்த படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்…” என்றார்.

Our Score